பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 செளந்தர கோகிலம்

குமாரனையும் அதற்கு இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துக் கொண்டு போயிருக்கவேண்டும் என்ற நினைவுகள் நமது திவான் சாமியாரது மனத்தில் தோன்றி, பெருத்த போர் விளைக்கத் தொடங்கின. தம்மிடம் அத்தனை வருஷ காலம் மகா உத்தமியாக நடந்து கொண்டவளான தமது காந்திமதியம்மாளா அப்படித் தன்னிடம் துரோக சிந்தையாக நடந்து கொண்டிருப்பாளென்றும், தாம் கண்டதும், கேட்டதும் கனவோ நினைவோவென்றும் திவான் எண்ண எண்ண, அவரது அறிவு சிதறிப்போக ஆரம்பித்தது. அவர் முற்றிலும் பிரமித்துப் போய்விட்டார். வேறே எவனாகிலும் ஏதேனும் அநுகூலத்தைக் கருதித் தம்மைக் கொல்ல உத்தேசித்தானோவென்று தாம் எதிர்பார்த்ததை ஊர்ஜிதப்படுத்த எவ்வித ஏதுவுமில்லையென்ற நிச்சயம் ஏற்பட்டது. ஆகவே, தாம் சந்நியாசம் வாங்கிக் கொண்டது தமக்குச் சரியான நிலைமை என்ற முடிவையும் அவர் அடைந்தார். பர்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் மனிதர் வாழலாம்; அவள் ஏறுமாறாக நடப்பாளானால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று முன்னோர் கூறிய விலை மதிப்பற்ற அருள்மொழி தமது விஷயத்தில் தானாகவே பலித்துவிட்டது என்று திவான் சாமியார் நினைத்துக்கொண்டார். எவ்வளவுதான் தமது மனைவியும், குமாரனும் தமக்கு உதவாமல் போய் விட்டாலும், தாம் உலகையும் பெருத்த பதவியையும் துறந்து காஷாயம் வாங்கிக்கொண்டு யாத்திரை சென்றாலும், தமக்கு எவ்விதக் குற்றமும் புரியாத தமது தந்தையைத் தாம் விசனக் கடலில் ஆழ்த்தியதும், அவரைப் பார்க்காமல் போவதும் பெருத்த குற்றமென்று திவான் உணர்ந்தார். ஆயினும், தமது தந்தை தாம் இறந்துபோய்விட்டதாக நினைத்து, விசனக் கடலில் ஆழ்ந்து செயலற்று அநாதரவாய் இருந்து, பிறருடைய உதவியையே எதிர்பார்த்து, கடைசியில் தமது மிகுதிக் காலத்தையும் அமைதியாகக் கடத்துவதற்கு அதுகுணமாக ஒரு பெண்ணை மணந்து கொண்டிருக்க, அந்தச் சமயத்தில், தாம் இன்னார் என்று அவரிடம் வெளியிட்டால், கிழவர் அந்த அபாரமான அதிர்ச்சியைத் தாங்கமாட்டாமல் இறந்து போனாலும் போய்விடுவார். இறந்துபோன புத்திரனை மறுபடி காண்பதான அமிதமான பேராநந்தம் ஒருபுறமிருக்க, இவ்வளவு