பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 செளந்தர கோகிலம்

கொண்டாவது எடுக்கச் செய்து, இதையும் முன் இருப்பவை களையும் ஒத்திட்டுப் பார்க்கச் செய்தால் நான்தான் குஞ்சிதபாத முதலியார் என்பது சந்தேகமற உறுதிப்பட்டுப் போகும்.”

‘தவிர, என்னுடைய சம்சாரமும், அவளுடைய தகப்பனார் முதலியோரும் என்னுடைய ஸ்தாவர சொத்துக்களையெல்லாம் சிலரிடம் குறைவான விலைக்கு விற்று விட்டு அந்தத் தொகை களையும், தங்களிடம் பணமாகவும், நகைகள் பாத்திரங்கள் முதலிய சாமான்களாகவும் இருந்தவைகளையும் எடுத்துக்கொண்டு வேறு எந்த ஊருக்கோ போய்விட்டதாகவும் தெரிகிறது. நான் விசாரித்துப் பார்த்தவரையில், அவர்கள் இன்ன இடத்தில் இருக்கிறார்கள் என்பது இதுவரையில் தெரியாமல் இருக்கிறது. என்னுடைய பேரனான ராஜாபகதூர் என்பவன் இப்பொழுது உயிரோடு இல்லை என்பது நிச்சயமாகாது இருக்கிற படியால், எனக்குத் தகனம் செய்த பிறகு ஒரு மாச காலத்திற்குள் என் ஸ்தாவர சொத்துக்களை விற்பதற்கு என் மனைவிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அவ்வாறு விற்கப்பட்ட தஸ்தாவேஜும் செல்லத் தக்கதல்ல. அவைகளை வாங்கியவர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் ஆத்திரப்பட்டு வாங்கினது தவறானாலும், அவர்கள் குறைவான கிரயத்திற்கு வாங்கி இருக்கிறார்கள். ஆனாலும், நியாயப்படி பார்த்தால், அவர்கள் கொடுத்த தொகையை அவர்கள் மறுபடி அடையச் செய்து சொத்துக்களை அவர்களிடமிருந்து மீட்டுக்கொள்வதே தகுதியான காரியமாகப் படுகிறது.”

‘ஆகவே, காருண்ய துரைத் தனத்தார் என் மீது கிருபை கூர்ந்து இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கைகளை எடுத்து, செய்ய வேண்டிய விசாரணையைச் செய்து நான், இறந்து போய்விட்டதாக எண்ணி எனக்குச் சவச் சடங்குகள் நடத்தியதும், என்னை மயானத்தில் வைத்துக் கொளுத்த முயன்றதும் தவறென்றும், டிை சடங்குகள் ரத்தாகிவிட்டன வென்றும், என்னுடைய சம்சாரத்தின் மேலும், இன்னும் மற்ற சகலமான சொத்துச் சுதந்தரங்களின் மேலும் எனக்கு ஆதியில் இருந்துவந்த பாத்தியதை சிறிதும் பாதிக்கப்படாமல் இப்பொழுதும் அப்படியே இருந்து வருகிறதென்றும், என் மனைவியிடம் என் ஸ்தாவர சொத்துக்களை வாங்கியவர்கள் அவர்களால் கொடுக்கப்