பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 செளந்தர கோகிலம்

குஞ்சிதபாத முதலியார் அனுப்பிய மனுவைப் படித்துப் பார்த்த சென்னை கவர்னர் துரை அளவற்ற ஆச்சரியமும் பிரமிப்பும் அடைந்து, அவ்விதமான அதிசய சம்பவமும் உலகத்தில்: நடக்குமோ வென்று மயங்கி, எவனாகிலும் மோசக் கருத்துள்ள மனிதனாலோ, அல்லது பைத்தியம் கொண்டுள்ள மனிதனாலோ அந்த மனு எழுதியனுப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தார். ஆயினும், அதன் உண்மையைத் தாம் சிரமப்படி, கீழ் அதிகாரிகளைக் கொண்டு நிச்சயிக்க வேண்டுமென்று தீர்மானித்து அந்த மனுவைத் தஞ்சை ஜில்லா பெரிய கலெக்டர் துரைக்கு அனுப்பி, அதை மற்ற சாதாரண மனுக்களைப்போலப் பட்டவர்த்தனமாய் விசாரிக்காமல் நிரம்பவும் யுக்தியாகவும் ஜாக்கிரதையாகவும் விசாரணையையும் நடவடிக்கைகளையும் நடத்தி அதன் உண்மையைக் கண்டு எழுதும்படி ஆக்ஞாபித்தார். அப்பொழுது அந்த ஜில்லாவின் தலைமை அதிகாரத்தை வகித்தவரான பெரிய கலெக்டர் நாடார் ஜாதியைச் சேர்ந்த ஒரு கனவான். அவரது தந்தை கிறிஸ்து மதத்தைத் தழுவிக் கொண்டவர். கிரமப்படி புத்திரரும் அதே சமயத்தைத் தழுவியவர். ஆயினும், புத்திரரது மனம் அதிதுரித கதியிற் செல்லக் கூடியதும், எதையும், உண்மையைக் கண்டு, நிற்பக்ஷபாதமாய் நிர்ணயிக்கக் கூடிய திராசு முனை போன்றது. சில வருஷ காலத்திற்கு முன்பு வரையில் அச்சியற்றும் வசதிகளும், ஒவ்வொரு பாஷையிலு முள்ள அரிய நூல்களை அச்சியற்றுவதும், ஒரு பாஷையிலுள்ள நூல்களை வேறு பாஷைகளில் மொழி பெயர்ப்பதும் இல்லாத காலத்தில், அவரவர் தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போல, தமது முன்னோர் ஏட்டுச்சுவடிகளில் அருமையாக எழுதி வைத்துக் கொண்டு எதைப் போதித்து அதுஸ்டானத்தில் கொண்டு வந்திருந்தனரோ அதுவே முடிவான உண்மையென்று ஒரே பிடியாய் சாதித்து, மற்றவர்கள் சொல்வதைக் கேளாமலும், அதன் உண்மையையோ அல்லது சிறப்பையோ தெரிந்து கொள்ளாமலும் பொதுவாக அன்னியருடைய கோட்பாடெல்லாம் மூடத்தனமானதென்று உல்லங்கனம் செய்தும், ஜனங்கள் இருந்து வந்த மூர்க்கத்தனமான கசட நிலைமை மாறி, ஒவ்வொருவரும் சமரவலமான புத்தியோடு, தம் நூல்களையும், மற்றவரது நூல்களையும் படித்து ஒத்திட்டுத் தமது பகுத்தறிவினால்