பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 181

உண்மை இன்னது, தவறு இன்னது என்று அறிந்து அதன்படி தமது கோட்பாடு நடையுடை பாவனைகள் முதலியவற்றைத் திருத்திக் கொள்ளத் தக்க விதமாய்த் தற்காலக் கல்வி முறைகளும் துரைத் தனமும் அமைந்திருப்பது பற்றி, அபாரமான விவேகமும் புத்தி தீrண்யமும் வாய்ந்த மேதாவிகள் தமது ஜீவனோபாயத்திற்குரிய கடமைகளைச் செய்த காலம் போக மிஞ்சியிருக்கும் அவகாசங் களில் ஏதேனும் ஒரு துறையில் இறங்கி இவ்விதமான மெய் ஆராய்ச்சியில் தமது கவனத்தையும் புத்தியையும் செலுத்திக் கொண்டே இருப்பது வழக்கம். சிலர் சங்கீத ஆராய்ச்சி செய்வர்; சிலர் மொட்டை மெத்தையில் கட்டிலின் மேல் படுத்துக் கையில் துரதிருஷ்டிக் கண்ணாடியை வைத்தபடி இரவெல்லாம் ஆகாயத்தை உற்று நோக்கி நக்ஷத்திரங்களின் போக்குவரத்துகளைக் கவனித்து வான சாஸ்திரத்தை ஆராய்ச்சி செய்வர். மற்றும் சிலர் பலவகைப்பட்ட பாஷைகளில் ஒரே பொருளைத் தரத்தக்க சொற்களின் ஒலி ஒற்றுமையை ஆராய்ச்சி செய்வர். இவ்வாறு ஒவ்வொருவரது மூளையும் ஒவ்வொரு துறையைப் பின்பற்றி அதே பைத்தியமாக இருந்து வருவது அநுபவபூர்வமான விஷயம். அதுபோலவே, நமது தஞ்சை ஜில்லா பெரிய கலெக்டர் தங்கமணி நாடார் அவர்களும் ஒருவித ஆராய்ச்சியில் தமது கவனத்தைச் செலுத்தி வந்தார். அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மற்ற மதங்களின் நூல்களைப் படித்ததன்றி இஸ்லாமிய மதம், கிருஸ்துவ மதம், ஹிந்து மதம் முதலிய பல சமயங்களிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் ஆராய்ச்சி செய்து வந்தார். அவ்வாறு ஆராய்ச்சி செய்ததில், அவருக்கு எல்லா மதங்களும் ஒரே மாதிரியானதென்றும், அதைக் குறித்து ஜனங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது அறியாமையென்றும், எல்லா மதங்களும் தங்கள் தங்கள் கடவு ளென்று குறிப்பது ஒரே வஸ்துவேயன்றி ஒவ்வொரு மதத்தின ருக்கும் தனித்தனியான வெவ்வேறு கடவுள் இல்லையென்றும், ஒரே கடவுள்தான் எல்லா மதத்தினரையும் படைத்துக் காத்து அழிப்பவரென்றும் கண்டுபிடித்து, மத வேற்றுமை, மதத் துவேஷம் முதலியவற்றைச் சிறிதும் பாராட்டாமல் சமரஸ் புத்தியோடு ஒழுகி வந்தார். வெள்ளைக்காரர் தஞ்சாவூர் என்பதை டாஞ்சூர் என்றும், திருச்சிராப்பள்ளி என்பது டிரிச்சினாபோலி என்றும்,