பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 183

தலையிடக் கூடாது என்று அஞ்சி அந்த வேலையை இன்னொரு வர் மீது தள்ளாமல், அந்த வேலையைத் தாமே நேரில் செய்து, உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலும் ஊக்கமும் கொண்டவராய் அவர் உடனே அதை எடுத்துக் கொண்டு எவருக்கும் தெரியாதபடி திருவடமருதூரையடைந்து யாரோ வழிப்போக்கர் போல நடித்து ஜனங்களிடம் நெருங்கிப் பழகி தந்திரமாகப் பேச்சுக் கொடுத்து குஞ்சித பாத முதலியாரைப் பற்றிய தகவல்கள் யாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டார். அவர் இரண்டு வருஷ காலத்திற்கு முன்பு இறந்துபோய் விட்டதாகவே அவ்வூரார் நம்பி இருந்தனர் என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொண்டார். அந்த ஊர் கிராம முன்சீப்பு, கர்ணம் முதலியோரிடமும் அவர் போய்த் தந்திரமாக விசாரித்துப் பார்த்ததில் அவர்களும் அதே விதமாய் எண்ணிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார். முடிவாக அவர் அவ்வூரை விட்டு வரும்பொழுது அந்த ஊரிலுள்ள பிரபலமான மிராசுதார்கள் இன்னின்னார் என்பதையும் தெரிந்து எழுதிக்கொண்டு வந்து சேர்ந்தார். குஞ்சிதபாத முதலியாரிடத்திலிருந்து அவ்விதமான மனு வந்திருக்கிறது என்பதைத் தமது சிரஸ்ததாருக்குக்கூட வெளியிடாமல் கலெக்டர் அதைப் பரம ரகசியமாக வைத்துக் கொண்டிருந்தார். அவர் திருவடமருதூரிலிருந்து வந்தவுடனே தமது சிரஸ்ததாரை அழைத்து அவரிடம் சில மனிதர்களின் விலாசம் அடங்கிய ஜாப்தாவொன்றைக் கொடுத்து, அவர்களெல் லோரும் அதற்கு மூன்றாவது நாள் தமது கச்சேரியில் வந்து ஆஜராகவேண்டுமென்று சம்மன் எழுதி உடனே அனுப்பச் செய்தார்; ஆனால், இன்ன விஷயமாக அவர்கள் தருவிக்கப் படுகிறார்கள் என்பது அந்தச் சம்மனில் குறிக்கப்படவில்லை. இன்னின்னாருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை சிரஸ்ததார் யாரிடத்திலும் வெளியிடக்கூடாது என்றும், வெளியிட்டால், அவரை உடனே வேலையிலிருந்து விலக்கி விடுவதாகவும் கலெக்டர் கூறிக் கண்டித்து வைத்திருந்தார். ஆதலால், சிரஸ்ததார் அது விஷயத்தில் நிரம்பவும் ஜாக்கிரதையாக இருந்து வந்தார். இன்ன சம்பந்தமாக அவர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதே சிரஸ்ததாருக்குத் தெரியாமல் போகவே அவர் அதன் உள் மர்மத்தை அறிந்து கொள்ள மாட்டாதவராய் இருந்தார்.