பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 185

அதற்கு உத்தரமாக சலாம் செய்தார். அவருக்குப் பக்கத்தில் நின்ற குஞ்சிதபாத முதலியார் கலெக்டர் வேறு எங்கேயோ வருகிறார் . என்று நினைத்து நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். வேறு எவரும் காணப்படவில்லை. அதற்குள் நாடாரும் போய்க் கலெக்டரது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். ஆதலால் அதைக் கண்ட குஞ்சிதபாத முதலியார் திடுக்கிட்டு திக்பிரமை கொண்டு நடுநடுங்கி, கலெக்டரே நேரில் தமது ஊருக்கு வந்து தம்மை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று உடனே நிச்சயித்துக் கொண்டு அவர் அவ்வாறு செய்தது தமது நன்மைக்கு அறிகுறியோ அல்லது தீமைக்கு அறிகுறியோ என்பதையும், அவர் யார் யார் எவ்விதமாக விசாரணை செய்யப் போகிறாரோ வென்பதையும் நிச்சயிக்க மாட்டாதவராய்த் தத்தளித்து, சுற்றுமுற்றும் பார்த்து விழித்துக் கொண்டு நின்றார்.

அங்கு நின்ற சிரஸ்ததார் முதலிய சிப்பந்திகள் குஞ்சிதபாத முதலியாரை உற்று நோக்கினர். ஆனாலும், அவர் இன்னார் என்பதையாவது, கலெக்டர் என்ன விதமான விசாரணை செய்யப் போகிறார் என்பதையாவது அறிந்து கொள்ள மாட்டாதவராய் பிரமித்து நின்றனர். கலெக்டரது ஆசனம் இருந்த கூடத்தை யடுத்த ஒரு பெரிய சுவருக்கு அப்பால் வெளிப்பக்கத்துத் தாழ்வாரம் நீளமாக இருந்தது. தாழ்வாரத்துக்கும், ஷை கூடத்திற்கும் நடுவில் இருந்த சுவரில் ஒரு பெரிய ஜன்னல் இருந்தது. அந்த ஜன்னலின் கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன. அக்கூடத்தில், ஜன்னலிலிருந்து சுமார் மூன்று கஜ தூரத்தில், அந்த ஜன்னலை மறைத்தாற் போல ஒரு மறைவு தட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தட்டியில் சுமார் 5 அடி உயரத்தில் ஒரு சாண் நீள அகலத்தில் ஒரு துவாரம் விடப்பட் டிருந்தது. கலெக்டர் அந்தத் தட்டியின் மறைவில் குஞ்சிதபாத முதலியாரை நிற்கச்செய்து, தமது மேஜை நாற்காலிகளை அவருக்கருகில் கொணர்ந்து போடும்படி செய்து, தாமும் அவ்விடத்தில் உட்கார்ந்து கொண்டார். உட்கார்ந்து கொண்டவர் தமது சிரஸ்ததாரை அழைத்து, திருவடமருதூரிலிருந்து வந்து கீழே காத்திருந்த மனிதர்களை ஜாப்தாவின் வரிசைப்படி ஒவ்வொருவராய் மேலே அழைத்து வந்து ஜன்னலுக்கு வெளியில் தாழ்வாரத்தில் நிறுத்தி வைக்கும்படி கட்டளை இட,