பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

8

7

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார்

தகப்பன்மார் இருந்தார்கள். இவருடைய கூடப் பிறந்த தம்பி ஒருவரும் இருந்தார். அவருடைய பெயர் குட்டியப்பா முதலியார் என்பது; இவருக்கு அகிலாண்டத்தம்மாள் என்ற தமக்கை ஒருத்தி உண்டு. அந்த அம்மாளை திருநாகேசுவரத்தில் பொன்னம்பல முதலியார் என்ற ஒருவருக்குக் கட்டிக் கொடுத்திருந்தார்கள். இவருக்குச் சுமார் ஐந்துவேலி நிலம் இருந்தது. இவருடைய தம்பி நிலத்தில் பயிர்ச் செலவைக் கவனிக்கிறது. இவர் தம்முடைய உத்தியோகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இவருடைய வீடு தெற்கு வீதியில் மேலண்டைக் கோடியில் இருந்தது. ஒட்டு வீடு; வீட்டுக்குப் பின்புறத்தில் தென்னை, வாழை, மூங்கில், மா, பலா முதலிய மரங்கள் அடர்ந்த தோப்பு இருந்தது.

கலெக்டர் : சரி, அவ்வளவு விவரமே போதுமானது. இன்னும் ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன். அதை மாத்திரம் கவனித்துச் சொல்லுங்கள். இவருக்கும் உங்களுக்கும் மாத்திரம் தெரிந்துள்ள ரகளிலியமான விஷயம் ஏதாவது இருக்கிறதாவென்று நினைத்துப் பார்த்து அதை என்னிடம் சொல்லுங்கள்.

குஞ்சிதபாத முதலியார் : (சிறிது நேரம் யோசனை செய்து) ஆம் இருக்கிறது, சொல்லுகிறேன். நான் அந்த ஊரை விட்டுப் போனதற்குச் சுமார் ஒரு வருஷத்திற்கு முன்பு இவர் சர்க்கார் வாய்தாப் பணங்களை ஆயிரக்கணக்கில் வசூல் செய்து வீட்டில் பெட்டியில் வைத்திருந்தார். இவருக்குத் தெரியாமல் இவருடைய தம்பி அந்தத் தொகையில் ஆயிரம் ரூபாயை எடுத்து கும்பகோணத்திலுள்ள ஒரு தாசிக்குக் கொடுத்துவிட்டார். இவர் தாலுகா கச்சேரிக்கு இருசால் அனுப்பவேண்டிய சமயத்தில் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, என்னிடம் ஓடிவந்து விஷயத்தைச் சொன்னார். நான் உடனே ஆயிரம் ரூபாய் கைமாற்றாக எடுத்துக் கொடுத்தேன். பிறகு இவர் ஆறுமாச காலங்கழித்து நெல் விற்றுப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். இவர் அதற்கு வட்டி கொடுக்க வந்தார். நான் வேண்டாமென்று சொல்லி விட்டேன். வீட்டில் சர்க்கார் பணம் குறைவுபட்டது. என்னிடம் கடன் வாங்கிச் செலுத்தியது, பிறகு அதை எனக்குக் கொடுத்தது முதலிய விவரமெல்லாம் மற்ற எவருக்கும் தெரியாது. எனக்கும் இவருக்கும்தான் தெரியும்.