பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் i89

எப்படித் தெரிந்திருக்குமென்று எண்ணுகிறீரோ? அது விஷயமாய் நான் உம்மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துக்கொண்டு விடுவேனென்ற யோசனையா? நீர்தான் உடனே குஞ்சிதபாத முதலியாரிடம் ஒடி ஆயிரம் ரூபாய் கைமாற்று வாங்கிக் கட்டிவிட்டு நெல்லை விற்று அவருக்குக் கொடுத்தீரே. அவர் வட்டிகூட வேண்டாமென்று சொல்லிவிட்டாரே என்றார்.

அதைக்கேட்ட கிராம முன்சீப் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து சிறிது நேரம் மயங்கி நின்றபின், “இந்த மாதிரி சங்கதி மூன்று வருஷத்துக்கு முன்பு நடந்ததாகத் தாங்கள் சொல்லுகிறீர்கள். எனக்கு இதைப் பற்றி அவ்வளவு நன்றாக நினைவுண்டாகவில்லை. இது நிஜமோ இல்லையோ என்பதை நான் இப்பொழுது நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை” என்றார்.

கலெக்டர், ‘என்ன ஐயா! இப்பேர்ப்பட்ட முக்கியமான பெரிய விஷயத்தை யாராவது இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடுவார்களா? என்ன ஆச்சரியம் ஐயா இது காரியம் இப்படி நடந்ததென்பதை ருஜூப்படுத்தக்கூடிய சாகசியை வரவழைக் கட்டுமா?’ என்றார்.

கிராம முன்சீப்பு, “நீங்கள் சொல்வதுபோல விஷயம் நடந்திருந்தாலும், அது எனக்கும் அந்தக் குஞ்சிதபாத முதலியாருக்குந்தானே தெரிந்திருக்கும். அவர் இறந்துபோய் இரண்டு வருஷ காலமாகிறது. வேறே யார் தங்களுக்கு சாகரியாக வரப்போகிறார்கள்?’ என்றார். உடனே கலெக்டர் அவரை நோக்கி வேடிக்கையாகப் புன்னகை செய்து, ‘ஐயா! நீர் பேசுவது நிரம்பவும் வேடிக்கையாக இருக்கிறதே! குஞ்சிதடாத முதலியார் இறந்துபோய் விட்டார்; வேறு ஒருவரும் சாகூதி இல்லை; ஆகையால் விஷயம் நடந்ததாக ஞாபகமில்லையென்று சொல்லுகிறீரா? இப்படி உண்மையை அடியோடு மறைக்கப் பார்த்தால் நான் இதைச் சும்மா விட்டுவிட மாட்டேன். நீர் இப்படியே இரும். சாகூதி இதோ வருகிறார் பாரும்” என்று கூறிய வண்ணம் பக்கத்திலிருந்த அறைப்பக்கம் போய் வெளியில் நின்றபடி குஞ்சிதபாத முதலியாருக்குச் சில சைகைகள் செய்தார். வெளியில் நடந்த விஷயங்களையெல்லாம் கேட்டு சந்தோஷ