பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iSC செளந்தர கோகிலம்

மடைந்தவராய் நின்று கொண்டிருந்த குஞ்சிதபாத முதலியார் மெதுவாக நடந்து அறைக்கு வெளியில் வந்து மெளனமாக நின்று கிராம முன்சீப்பைப் பார்த்தார். அதே காலத்தில் கிராம முன்சீப்பும் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். பார்க்க, கிராம முன்சீப் திடுக்கிட்டு நடுநடுங்கிக் குஞ்சிதபாத முதலியாரைப் பார்த்த பார்வையை மாற்றாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். தாம் காண்பது கனவோ நனவோ என்ற சந்தேகம் அவரது மனதில் உண்டாக்கிவிட்டது. தமக்கெதிரில் வந்து நின்றது உண்மையில் குஞ்சிதபாத முதலியார் தானா அல்லது அவரைப் போலச் செய்து வைக்கப்பட்ட உருவச் சிலையா என்ற சந்தேகமும் தோன்றியது. ஆயினும், அந்த வடிவம் அறைக்குள்ளே இருந்து தானாக நடந்து வெளியில் வந்ததாகையால், அது உயிருள்ள வடிவமாகத்தான் இருக்க வேண்டுமென்று கிராம முன்சீப்பு தனக்குத் தாமே நிச்சயப்படுத்திக் கொண்டார். திருவடமருதூரிலிருந்து அழைக்கப்பட்டிருந்த சாகூரிகளுள் பெரும்பாலோர் அதற்குச் சமீபகாலத்திற்கு முன்பே திவான் சாமியாரால் கொடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்திருந்தன ரென்பதை நாம் இங்கு குறிப்பது அத்தியாவசியமான விஷயம். கிராம முன்சிப்பும் அந்தப் படத்தைப் பார்த்திருந்தவர் ஆதலால், குஞ்சிதடாத முதலியாரது வடிவம் அவருக்கு நன்றாக ஞாபகத்தி விருந்தது. ஆகவே, அவர் குஞ்சிதபாத முதலியாரைப் பார்த்த உடனே, அவர் இன்னார்தான் என்ற எண்ணம் கிராம முன்சீப்பினது மனத்தில் உண்டாகிவிட்டது. அவர் தமது வியப்பையும் மனவெழுச்சியையும் அடக்க மாட்டாதவராய்க் கலெக்டரை நோக்கி, “என்ன ஆச்சரியம் இது இரண்டு வருஷ காலத்திற்கு முன் இறந்துபோன மனிதர் உயிரோடு வந்து நிற்கிறாரே! அவருடைய பிரேதத்தை மயானத்துக்கு எடுத்துப் போன காலத்தில் நானும்கூட இருந்தேன். அதை ஜதையில் வைத்துக் கொள்ளி போட்டுவிட்டு நாங்களெல்லோரும் வந்தோமே! அப்படி இருக்க, அவர் இப்போது எப்படி வந்தா ரென்பது தெரியவில்லையே! அவரைப் போலவே இன்னொரு மனிதர் இருக்கிறாரா என்றார்.

உடனே கலெக்டர் அவரை நோக்கி, ‘ஐயா குஞ்சிதபாத முதலியாரைப்போல இந்த உலகத்தில் இன்னொரு மனிதர்