பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 191

இருக்கலாம். இவருடைய உடம்புகளின் தோற்றம் மாத்திரம் ஒற்றுமையாக இருக்குமேயன்றி, ஒருவருக்கு மாத்திரம் ரகஸியத்தில் தெரிந்த சங்கதிகூட மற்றவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய முகாந்தரமென்ன? நீர் குஞ்சிதபாத முதலியாரிடம் ரகஸியமாய் ஆயிரம் ரூபாய் கைம்மாற்றாக வாங்கி வட்டி இல்லாமல் திருப்பிக் கொடுத்த விஷயத்தை நீர் வேறு யாரிடத்தி லும் சொல்லவில்லையல்லவா? அப்படி இருக்க, அந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்தது? இவர் குஞ்சிதடாத முதலியார் அல்லவென்றே வைத்துக்கொள்வோம். உங்களுடைய ஊர் விஷயங்களையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு இவர் அங்கே வந்திருக்க வேண்டுமல்லவா. அப்படி இவர் உங்களுடைய ஊருக்கு வந்திருந்தால், ஜனங்கள் இவரைக் கண்டு ஆச்சரிய மடைந்து இவர் குஞ்சிதடாத முதலியாரைப் போல இருக்கிறா ரென்ற வதந்தியைக் கிளப்பிவிட்டிருப்பார்கள் அல்லவா? இந்த இரண்டு வருஷ காலத்தில் அப்பேர்ப்பட்ட வதந்தி எதாவது உண்டாயிற்றா அல்லது நீர் இந்த இரண்டு வருஷ காலத்திற்குள் இவரை உங்கள் ஊரில் பார்த்ததுண்டா?” என்றார்.

அதைக் கேட்ட கிராம முன்சீப் முன்னிலும் அதிகரித்த மனக் கலக்கமும் பிரமிப்பும் அடைந்து, தாங்கள் சொல்வது நியாய மாகத்தான் இருக்கிறது. இவரை நான் இரண்டு வருஷ காலத் திற்குள் அந்த ஊரில் பார்த்ததுமில்லை. தாங்கள் சொல்வது போல ஜனங்களும் அவ்விதமான பிரஸ்தாபம் செய்ததில்லை. ஆனாலும், நாங்கள் அவரை வைத்துக் கொளுத்திவிட்டு வந்ததும் உண்மை யான விஷயந்தானே. அப்படி இருக்க அவர் மறுபடி உயிரோடு எப்படி வந்திருக்க முடிந்ததென்பது விளங்கவில்லையே” என்றார். உடனே கலெக்டர், “சரி, நீர் கொண்டுள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் நானும் இந்த விசாரணையை நடத்துகிறேன். நீரும் இப்படியே கொஞ்ச நேரம் இரும். உம்மை வரவழைத்ததைப்போல இன்னொரு மனிதரை வரவழைக்கிறேன். அவரைப் பற்றிய தகவல்களை யெல்லாம் இவர் சொல்லுகிறாரா இல்லையா என்று பார்ப்போம். நீரும் இந்தத் தட்டியின் மறைவில் நில்லும். ஆனால் நான் இவருடன் பேசும் போது நீர் வாயைத் திறக்கவே கூடாது. இவராகவே எல்லாத் தகவல் களையும் சொல்ல வேண்டும். நீர் இவருக்கு எதையும் சொல்லிக்