பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர கோகிலம்

1

9

2

கொடுக்கக் கூடாது” என்று கூறியவண்ணம், தமது சிரஸ்ததாரை நோக்கி ஜாப்தாவில் குறிக்கப்பட்ட அடுத்த சாசுதியை அழைத்து வந்து ஜன்னலுக்கு நேராகத் தாழ்வாரத்தில் நிற்க வைக்கும்படி கட்டளையிட அவர் அப்படியே செய்தார். அப்பொழுது கலெக்டர் குஞ்சிதபாத முதலியார், கிராம முன்சீப் ஆகிய மூவர் மாத்திரம் தட்டிக்கு மறைவில் இருந்தனரென்பதும் நாம் கூறாமலே விளங்கும். உடனே கலெக்டர் கிராம முன்சீப்பை நோக்கி, “ஐயா! இதோ தட்டியில் இருக்கும் துவாரத்தின் வழியாக, ஜன்னலுக்கு வெளியில் யார் நிற்கிறார் என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும். அதை நீர் வெளியிட வேண்டாம்” என்றார்.

உடனே கிராம முன்சீப்பு அவ்வாறே துவாரத்தின் வழியாகப் பார்த்து, ஜன்னலுக்கு அப்பால் தாழ்வாரத்தில் நின்று கொண்டி ருந்தது இன்னார் என்பதைத் தெரிந்துகொண்டு, வாயைத் திறவாமல் அப்பால் நகர்ந்து நின்றார். பிறகு கலெக்டரது வேண்டு கோளின் மேல் குஞ்சிதபாத முதலியார் துவாரத்தண்டை போய் நின்று ஜன்னலுக்கு வெளியில் பார்த்து அவ்விடத்தில் நின்றது யார் என்பதைத் தெரிந்து கொண்டு கலெக்டரது முகத்தை நோக்கினார்.

கலெக்டர் : இப்போது வந்து நிற்கிறவர் யாரென்பது தெரிகிறதா?

குஞ்சிதபாத முதலியார் : ஒ தெரிகிறது! இவர் திருவட மருதூர் கர்ணம் இராமச்சந்திர ஐயர். இவருடைய தகப்பனார் பெயர் சுந்தரமைய்யர். இவருடைய வீடு சின்ன கோவிலுக்கு எதிரிலிருக்கும் சன்னிதித் தெருவில் இருக்கிறது. அது தெற்குப் பார்த்த ஒட்டு விடு. இவருடைய தகப்பனார் தாயார் ஆகிய இருவரும் சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பு மார்கழி மாசத்தில் 10 தினங்களுக்கு முன்னும் பின்னுமாக ஒரே மாசத்தில் இறந்து போய் விட்டார்கள். இவருடைய சம்சாரம் குட்டையாகவும், கருப்பாகவும், முகத்தில் பெரியம்மைத் தழும்பு களோடும் இருப்பார்கள். அந்த அம்மாளுடைய வலது கண்ணில் பூ விழுந்ததுபோல இருக்கும். இவருக்குப் பெண் குழந்தைகள் ஐந்து, ஆண் குழந்தை ஒன்று. ஆண் குழந்தைதான் கடைக்குட்டி அதற்கு இப்போது ஐந்து வயசிருக்கலாம். அது கால்களை ஊன்றி