பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 195

அனுப்பிய பின் குஞ்சிதபாத முதலியாரை அதற்கு முன் உட்கார வைத்திருந்த அறைக்குள் போயிருக்கச் செய்துவிட்டு, வெளியி லிருந்த கர்ணத்தை உள் பக்கத்தில் வரவழைத்துத் தமக்கெதிரில் நிற்க வைத்துக்கொண்டு, அவரது பெயர் குடும்ப விவரங்கள் முதலிய தகவல்களையெல்லாம் விசாரித்து எழுதிக் கொண்டார். அவை குஞ்சிதபாத முதலியார் கூறியவை போலவே இருந்தன. பிறகு கலெக்டர் அவரை நோக்கி, ‘இதெல்லாம் சரிதான். இன்னொரு விஷயம் கேட்கிறேன். அதை நீர் மறைக்காமல் சொல்ல வேண்டும், உமக்குச் சர்க்கார் சம்பள ரூபாய் புத்தல்லவா. அதைத் தவிர, வேறு எந்தெந்த வகையில் உமக்கு வருமானம் கிடைக்கும்?’ என்றார்.

கர்ணம் தாம் அந்த விஷயத்தில் உண்மையைச் சொன்னால் தமக்கு ஏதேனும் கெடுதல் நேருமோவென்று அஞ்சித் தயங்கி மெளனமாக நின்றார். மறுபடியும் கலெக்டர் அவரைப் பார்த்து, ‘சொல்லுமையா ஏன் விழிக்கிறீர்? நியாயமான வழியில் நீர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதைப்பற்றி நமக்கு அக்கறை இல்லை. நீர் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம். ஒரு வேலி நிலத்துக்கு ஒரு கள நெல் வாங்குவதுண்டா?’ என்றார்.

கர்ணம் திருட்டு விழி விழித்து, அதையெல்லாம் அவ்வளவு கண்டிப்பாக நான் வைத்துக் கொள்ளவில்லை. என்னவோ எங்கள் ஊரிலுள்ள மிராசுதார்கள் பெருத்த தனிகர்கள்; அவர் களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவர்கள் பார்த்து சந்தோஷப்பட்டு ஏதாவது கொடுத்தால், நான் வாங்கிக் கொள்வதுண்டு. அவர்கள் கொடுத்துத்தான் தீர வேண்டுமென்ற கட்டாயம் ஒன்றுமில்லை. அவர்கள் செல்வாக்குடையவர்கள். அவர்களுக்கு முன் நான் எம்மாத்திரம். அவர்கள் இஷ்டப்படாத காரியம் எதுவும் நடைபெறாது” என்றார்.

கலெக்டர், “ஆம், ஐயா, ஆம். அது எனக்குத் தெரியாதா? லஞ்சம் கொடுக்கிறவர்களெல்லோரும் மனம் ஒப்பித்தான் கொடுக்கிறார்கள். அவர்களுடைய இஷ்டத்துக்கு விரோதமாக நீர் போய் நெல்லை அள்ளிக் கொண்டு வருகிறதாக யாராவது சொன்னார்களா? சொல்லவில்லை. அது போகட்டும். இன்னம் எந்தெந்த விதத்தில் நீர் பணம் சம்பாதிக்கிறீர்? பத்திரம் எழுதிப் பணம் வாங்குவதுண்டா?’ என்றார்.