பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 197

சமீபித்து விடுமோவென்று தாம் அஞ்சுவதாகவும் உம்மிடம் சொன்னதன்றி, தமக்கு இன்னின்ன சொத்துகள் இருப்பதாகவும், அவைகளைத் தாம் இன்னின்னபடி விநியோகிக்க எண்ணு வதாகவும் சொல்லி, ஒர் உயில் தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டதுண்டா இல்லையா?” என்றார்.

கர்ணம் சிறிது நேரம் யோசனைசெய்து, தாங்கள் குறித்துப் பேசும் சந்தர்ப்பம் எப்போது நேரிட்டதென்று எனக்கு அவ்வளவு நன்றாக ஞாபகம் உண்டாகவில்லை. இருக்கலாம். யாராவது உயில் எழுதித் தரும்படி கேட்டிருக்கலாம். நான் ஜோசியம் சொல்லிப் பணம் சம்பாதிப்பதாகத் தாங்கள் சொன்னதற்கும், இந்த உயிலுக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லையே!” எனறாா.

கலெக்டர் சிரித்துக்கொண்டு, அதே சமயத்தில்தான் நீர் ஜோசியம் சொல்லிப் பணம் வாங்கிக் கொண்டது. உயில் எழுதும் படி கேட்டுக்கொண்ட கிழவர் இன்னம் இருபது வருஷகாலம் கல்போல இருப்பாரென்றும், அவருக்கு இராமர் லக்ஷ்மணர் போல இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கப் போகிறார் களென்றும், ஆகையால் உயில் எழுதவேண்டிய அவசியமே இல்லையென்றும் நீர் அவரிடம் சொல்லவில்லையா? அவர் தம்முடைய கைப் பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து உம்மிடம் கொடுத்து, மறுநாள் வரும் வருஷப் பிறப்புச் சன்மானமாக வைத்துக் கொள்ளும்படி சொல்ல வில்லையா? அப்படி நீர் சொன்னது ஜோசியமல்லாமல் வேறு என்ன?” என்றார்.

கர்ணம் முற்றிலும் திகைத்துக் கலங்கிப்போய், தாங்கள் குறிக்கும் மனிதர் இன்னார் என்ற ஞாபகம் எனக்கு இன்னமும் உண்டாகவில்லை. இருந்தாலும், தாங்கள் சொல்வதிலிருந்து பார்த்தால்கூட நான் ஜோசியம் சொன்னேனென்று எப்படி அர்த்தமாகும்? தாம் சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவோமோ வென்று ஒரு மனிதர் பயந்தால், அவருக்குத் தைரியமான வார்த்தை சொல்வது உலகத்தில் சாதாரணமாக நடக்கக்கூடிய காரியந்தானே. அதுவுமன்றி அவர் இன்னம் இருபது வருஷ காலம் இருக்கப் போகிறாரென்றும், அவருக்கு இரண்டு