பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ig3 செளந்தர கோகிலம்

குழந்தைகள் பிறக்கப் போகின்றனவென்றும் நான் சொல்வி யிருந்தால், அம்மாதிரி ஈசுவரன் செய்ய வேண்டுமென்று நான் கோருவதாக எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி அதை ஜோசியம் என்று எப்படி சொல்லுகிறது. இம்மாதிரி யெல்லாம் என் பேரில் தங்களிடம் யார் வந்து கோள் சொன்ன தென்பது தெரியவில்லையே. எனக்கும் இன்னொரு மனிதருக்கும் பரம ரகஸியமாக நடந்த சம்பாஷணைகளை யெல்லாம் தெரிந்து கொண்டு வந்து எவன்தான் தங்களிடம் சொன்னான் என்பது தெரியவில்லையே!” என்றார்.

உடனே, “நீர் யாருக்கு ஜோசியம் சொன்னிரோ அவரே வந்து இதை வெளியிட்டிருக்கலாமல்லவா?’ என்றார்.

கர்னம், இவ்விதமான தம்முடைய குடும்ப ரகஸியத்தை எவரும் வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்கள் என்றார். கலெக்டர், ‘ஐயா அந்த மனிதர் இறந்து போய் விட்டார் என்ற தைரியத்தைக் கொண்டு அவர் இப்போது இங்கே வர மாட்டார் என்று நினைத்து நீர் இப்படிப் பேசுகிறீரா? நீர் உண்மையை உள்ளபடி ஒப்புக் கொள்ளாவிட்டால் அவரையே நான் இப்போது இங்கே வரவழைத்துவிடுவேன்’ என்றார்.

கர்ணம், “இறந்துபோனவர் எங்கிருந்து வரப் போகிறார்? அவரைத் தாங்கள் கூப்பிடுகிறதாவது?’ என்றார்.

உடனே கலெக்டர், ‘ஓகோ இறந்து போனவர் வரமாட் டாரா இதோ வருகிறார் பாரும்” என்று கூறிய வண்ணம் குஞ்சிதடாத முதலியார் இருந்த அறையின் வாசலண்டை போய்ச் சைகை செய்ய, அதுவரையில் அவ்விடத்தில் நடந்த விசாரணையை நிரம்பவும் சுவாரஸ்யமாகவும் சந்தோஷத்தோடும் கேட்டுக் கொண்டிருந்த கிழவர் மெதுவாக வெளியில் வந்து கர்ணம் இராமச்சந்திர ஐயருக்கெதிரில் நின்று புன்னகை செய்தார்.

அவரைக் கண்ட கர்ணம் அதற்குமுன் கிராம முன்சீப் எவ்வாறு கலங்கி பிரமித்து, அது உயிருள்ள வடிவமோ அல்லது உயிரற்ற கற்சிலையோவென்று சந்தேகித்தாரோ, அது போலவே செய்து, வியப்போடு கலெக்டரை நோக்கி, “என்ன ஆச்சரியம் இது! இரண்டு வருஷத்திற்குமுன் இறந்துபோன குஞ்சிதபாத