பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 199

முதலியாரைப் போலவே இவர் இருக்கிறாரே! இவர் ஒருகால் வேறே எந்த ஊரிலாவது இருந்த, அவருடைய தமையனார் அல்லது தம்பியாக இருப்பாரோ!’ என்றார்.

கலெக்டர், ‘இவர் குஞ்சிதபாத முதலியாருடைய அண்ணன் அல்லது தம்பியாக இருந்தால் மாத்திரம் என்ன? ஒருவருடைய மனசுக்கு மாத்திரம் தெரிந்த விஷயங்களெல்லாம் அவருடைய அண்ணன் தம்பிகளுக்கும் தெரியவேண்டும் என்பது உண்டா? என்றார்.

கர்ணம், ‘அப்படியானால் இவர் குஞ்சிதபாத முதலியாராகத்தான் இருக்க வேண்டும். சுமார் இரண்டு வருஷ காலத்துக்கு முன் இவர் இறந்து போய் விட்டதாகச் சொன்னார் களே! அப்படி இருக்க, இவர் இப்பொழுது எங்கிருந்து திடீரென்று முளைத்து வந்தார்’ என்று அதிக வியப்போடு கூறினார்.

கலெக்டர், அதே சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற் காகத்தான் நானும் இந்த விசாரணையை நடத்துகிறேன். இதோ பக்கத்து அறையில் உங்கள் ஊர் கிராம முனிசீப் இருக்கிறார். நீரும் போய் அவருடன் இருந்து, இங்கே நடப்பதைக் கவனித்துக் கொண்டிரும். போம்” என்றார். உடனே கர்ணம் அவ்வாறே பக்கத்து அறைக்குள் சென்றார்.

அதன்பிறகு திருவடமருதூர் வாசிகளான மளிகைக் கடை குருமூர்த்தி செட்டியார், தோல் மண்டி மஸ்தான் சாயப்பு, நெல் வியாபாரம் பரிமணத்தா பிள்ளை, கோவில் தர்மகர்த்தா சொக்கப்பா முதலியார், மாட்டு வியாபாரி வீரமுத்துபடையாச்சி ஆகிய சுமார் பத்து கனவான்கள் முன் செய்யப்பட்டதுபோல ஒருவருக்குப் பின் ஒருவராய் வருவிக்கப்பட்டனர். கலெக்டர் அவர்களை முதலில் ஜன்னலுக்கு வெளியில் நிற்க வைத்து குஞ்சிதபாத முதலியார் வாய் மூலமாக அவரைக் குறித்த விவரங் களைத் தெரிந்து கொண்டு, பிறகு அவரை உள்ளே வருவித்து முன் செய்ததுபோலத் தந்திரமாகக் கேள்விகளைக் கேட்டு முடிவில் ஒவ்வொருவருக்கும் குஞ்சிதபாத முதலியாரைக் காட்டி அவர்கள் பிரமிப்படைந்து அவர் இன்னார் அல்லவா என்று தாங்களே அவரது பெயரை வெளியிடும்படி செய்தார். அவ்வாறு