பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 செளந்தர கோகிலம்

வந்தவர்களுள் பெரும்பாலோர் சமீப காலத்தில் திவான் சாமியா ரால் கொடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்திருந்தவர்கள் ஆதலால், அவர்கள் சிறிதும் சந்தேகமாவது தயக்கமாவது கொள்ளாமல் உடனே கிழவரது அடையாளத்தைக் கண்டு அவரது பெயரை சடக்கென்று வெளியிட்டு விட்டனர். கலெக்டர் அவர்கள் எல்லோரையும் விசாரித்து முடித்தவுடன், இன்னம் அழைக்கப்படாமல் மிஞ்சி நின்ற கடைசி சாட்சியை ஜன்னலுக்கு வெளியில் கொணர்ந்து நிறுத்தும்படி செய்து, உள்ளே நின்ற சாட்சிகள் எல்லோரும் தட்டியிலிருந்த துவாரத்தின் வழியாக முதலில் பார்க்கும்படி செய்தபின், குஞ்சிதபாத முதலியாரை அழைத்து அவ்விடத்தில் நிற்க வைத்து, “அதோ வந்து நிற்பது யார் தெரிகிறதா?’ என்றார்.

உடனே வெளியில் பார்த்த குஞ்சிதடாத முதலியாரின் மனத்தில் தாங்க வொண்ணாத மன எழுச்சியும், ஆனந்தமும் பொங்கிக் கிளம்பின. அவரது கண்களிலிருந்து கண்ணிர் சரேலென்று பெருகிக் கன்னங்களின் வழியாய் முத்து முத்தாக உதிர்ந்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உரோமம் சிலிர்த்து நின்றது. அவரது தேகம் கட்டிலடங்காமல் பதறிப் பறந்தது. அவர் தம்மை மறந்து பரவசமடைந்து, “இவன்தான் எங்கள் ஊர் மயானம் காக்கும் வெட்டியாரக் காத்தான் இவன் செய்யும் தொழில் கேவலமான தொழிலாக இருந்தாலும், இவன் தங்கமான மனசும் தயாள குணமும் உடைய சிரேஷ்டமான மனிதன். இவனுக்கு நான் அதிகமான பொருள் எதையும் கொடுத்துவிடவில்லை. நான் இவனுக்கு விட்டிருக்கும் மானிய நிலத்திலிருந்து வருஷம் ஒன்றுக்கு அதிகமாய்க் கிடைத்தால் நூறு ரூபாய் வரும். லக்ஷக் கணக்கிலிருந்து என்னுடைய சொத்துகளை யெல்லாம் எடுத்துக்கொண்ட சொந்த மனிதர்கள் இந்த மனிதனுடைய நன்றி விசுவாசத்தில் லக்ஷத்தில் ஒரு பங்குகூட உணரவில்லை. நெருப்பு என் உடம்பில் பட்டவுடன், நான் உணர்வடைந்து பிழைத்துக் கொண்டு எழுந்ததைக் கண்டவுடன், இவனுக்குண்டான ஆனந்தம் இவ்வளவு தான் இருக்குமென்று சொல்ல முடியாது. நான் இறந்துபோய் விட்டேனென்று கொட்டி முழக்கி வெளி வேஷங்காட்டி அழுது கொண்டிருந்த மிருகங்கள் என்னைத் தடியால் அடித்து இடுப்பை முறித்து