பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 செளந்தர கோகிலம்

பர்லாங்கு தூரத்திற்கு அப்பால் நின்றே ஆண்டே ஆண்டே’ என்று நிரம்பவும் அச்சத்தோடு கூப்பிடும் இயல்புடையவன். அவன் அதற்கு முன் எந்தக் கச்சேரியிலும் ஏறியறியாதவன் எந்த உத்தியோகஸ்தரோடும் பேசிப் பழகாதவன். தனக்கு தஞ்சை ஜில்லா பெரிய கலெக்டரிடத்திலிருந்து சம்மன் வந்திருக்கிறது என்ற செய்தியை அவன் உணர்ந்தபோதே, அவனுக்கு உயிர் போவது போலாய் விட்டது. எதற்காகத் தனக்குச் சம்மன் வந்திருக்கும் என்ற கேள்வியை அவன் தனக்கருகில் வருவோ ரிடத்திலெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பான். சம்மன் வந்த பிறகு அவனுக்கு ஆகாரத்திலாவது, தூக்கத்திலாவது, இன்னம் தனது இதர அலுவல்களிலாவது மனம் செல்லவில்லை. தஞ்சை கலெக்டர் கச்சேரிக்குள் நுழைவது தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுவதுபோல, அவனது மனதில் விவரிக்க இயலாத சங்கடத்தையும் வேதனையையும் உண்டாக்கியது. அவன் தமது ஊரிலிருந்து வந்திருந்த மற்ற மிராசுதார்களைப் பார்த்து, ‘சாமீ! என்ன வெசாரணை சாமீ. சுடுகாட்டேக் காத்துகிட்டுக் கெடக்கற இந்த நாயெ என்னத்துக்கு சாமீ. இம்பிட்டுத் துரம் இளுக்கறாங்க. சங்கதி இன்னதுன்னு தெரிஞ்சா ரவையூண்டு சொல்லுங்க சாமீ. என் மனசு தவிக்குது சாமீ. ஏஞ்சாமி கலெக்ட்டரு தொர எப்பிடி இருப்பாரு சாமி! நம்பளெப் போலெ இருப்பாரா, இல்லாமெப் போனா மதுரை வீரன் கணக்கா, அல்லாட்டி, பெரிய பூதங்கணக்கா இருப்பாரா சாமீ. நான் போனா அவரு என்னை என்னாச்சும் சேஞ்சுப்புடுவாரா சாமீ?’ என்று பலவிதப்பட்ட விபரீத சந்தேகங்களையும் கவலையையும் கொண்டு அதே பைத்தியமாகப் பிடித்துப் பிரமித்து மருள மருள விழித்துக் கொண்டு சித்தக் கலக்கம் அடைந்து நின்று, கலெக்டரது பிரம்மாண்டமான கச்சேரிக் கட்டிடத்தைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அது பூலோகமோ தேவேந்திரலோகமோ என்ற மலைப்பும் மனப்பிராந்தியும் ஏற்பட்டுப் போயின. அத்தகைய விபரீதமான நிலைமையில் இருந்த காத்தானை சிரஸ்ததார் அழைத்துக் கொண்டு போய்க் கலெக்டருக்கு எதிரில் நிறுத்தினார். கிலியினால் அவனது உடம்பு குபிரென்று வியர்த்துப் போயிற்று. கைகால்களெல்லாம் வெடவெடவென்று உதறுகின்றன; சகிக்க வொண்ணாத திகிலினால் அவனது தொண்டை இறுகிப்