பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 205

ராசதொரையே” என்று கூறிக் கதறியழுது கண்ணிரை ஆறாய்ப் பெருக விட்டவனாய் அப்படியே வேரற்ற மரம்போலக் குஞ்சிதயாத முதலியாரது பாதத்திற்கருகில் சாஷ்டாங்கமாக விழுந்து ஒலமிட்டு அலறத் தொடங்கிவிட்டான். அவனது மனதில் கரையுடைத்து விடப்பட்ட பெருத்த நதியின் வெள்ளம் போல அபாரமான மனவெழுச்சியும், ஆனந்தப் பெருக்கும், துயரப் பெருக்கும் பொங்கி அவனை மேற்கொண்டெழுந்து கரைபுரண்டோடின. ஆதலால், தான் கலெக்டரது கச்சேரியில் இருந்ததையாவது அவர் தன்னைக் கோபித்துத் தண்டிப்பாரோ என்பதையாவது சிறிதும் எண்ணாமல் துடிதுடித்துப் பதறிக் கீழே சாய்ந்து மனமுருகிக் கனிந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டான். அந்தக் காட்சி கல்லும் கரைந்துருகத்தக்க மகா பரிதாபக் காட்சியாக இருந்தமையால், குஞ்சிதடாத முதலியார் அழுகிறார், கிராம முன்சீப் முதலிய சாகவிகள் எல்லோரும் பொருமிப் பொருமி அழுகின்றனர். கலெக்டரும் குழந்தைபோல விம்மி விம்மி அழுகிறார். சிரஸ்ததார், டலாயத்துகள், டபேதார் முதலிய சிப்பந்திகளும் அழத் தொடங்கி விட்டனர். அந்த ஆனந்த கரமான அழுகை ஐந்து நிமிஷ காலம் எவராலும் அடக்க இயலாததாய் நீடித்து நின்றது. கலெக்டர் தமது கண்ணியமான நிலைமையைக் கருதி உடனே தமது கண்ணிரைத் துடைத்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு காத்தானை நோக்கி, அடா காத்தான் எழுந்திரு. எழுந்திரு. போதும் இந்த ஐயாவிடம் சங்கதி தெரிந்து கொண்டது. இது சர்க்கார் கச்சேரி என்பதைக்கூட மறந்து கீழே விழுந்து இப்படிக் கூச்சலிடுகிறாயே! எழுந்திரு” என்று அதட்டிக் கூறினார்.

உடனே காத்தான் பயந்து, சரேலென்று எழுந்து வணக்கமாக நின்று, ‘இல்லிங்க தொரையே இங்க எசமானுக்கு வந்த கதியெ நீங்க கேட்டிங்கன்னா, அப்படியே உருவிப் போயிடுவீங்க ராசாவே! என்னமோ நானு ஏளெயிங்க. தயாளமாக் கஞ்சி வாத்து எங்க குடும்பத்தெ காப்பாத்தின புண்ணியவானெப் பாத்தா ஒடனே என்னயறியாமப் பொங்கிப் போயிடிச்சுங்க. கோவம் வைக்காதீங்க’ என்று தேம்பித் தேம்பி அழுத வண்ணம் நிரம்பவும் பணிவாகக் கூறினான்.