பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 2O7

ஒடம்பு. கட்டையிங்க அதியம். அதுனாலே எலும்பு கிலும்பு எல்லாம் வெந்து நீறாப் போயிருச்சு - இன்னு அவுரு மத்தவங்களுக்குச் சமாதானம் சொன்னாரு அவுங்க அதெ நெசமுன்னு நம்பி சொம்மா இருந்துட்டாங்க. அப்பாலெ மரக்கட்டெச் சாம்பலெயெல்லாம் அவுங்க தண்ணியே ஊத்திக் கரைச்சுப்புட்டுப் போயிச் சேர்ந்தாங்க. அமிட்டுதான் சேதி” எனறான.

அதைக் கேட்ட கலெக்டர் திருவிடமருதூரிலிருந்து வந்திருந்த சாகதிகள் எல்லோரையும் பார்த்து, “ஏன் ஐயா என்ன சொல்லு கிறீர்கள்? இவன் சொல்லுகிற வரலாறு உண்மையாக இருக்குமா? இவர் உங்கள் ஊர்க் குஞ்சிதபாத முதலியார்தானா, அல்லவா?” எனறாா.

உடனே எல்லோரும் ஏகமனதாக, ‘காத்தான் சொல்வது நிஜமாகத்தான் இருக்க வேண்டும். இவர் குஞ்சிதபாத முதலியார் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகமில்லை” என்றனர்.

உடனே கலெக்டர், “சரி, அது இருக்கட்டும். இவர் இப்போது உங்களுடைய ஊருக்குள் வந்தால், நீங்கள் இவர் மேல் கல்லை விட்டெறிந்து இவரை அடித்துக் கொன்று விடுவீர்களா?’ என்றார்.

ஜனங்கள், ஐயோ பாவமே, நாங்களேன் அப்படிச் செய்கிறோம். நாங்களும் மனிதர்கள்தானே பேய் பிசாசுகள் அல்லவே, ஒரு நாளும் நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம்” என்றனர்.

கலெக்டர், ‘மற்றவர்கள் அப்படிச் செய்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா?” என்றார்.

எல்லோரும், ‘அதற்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்’ என்றனர்.

உடனே கலெக்டர் அவர்கள் எல்லோரையும் நோக்கி, “சரி: நீங்கள் இனி உங்கள் ஊருக்குப் போகலாம். நான் இப்போது செய்த விசாரணையின் விவரத்தையெல்லாம் நம்முடைய துரைத் தனத்தாருக்கு அனுப்பப் போகிறேன். அவர்களுடைய முடிவான உத்தரவு வெகு சீக்கிரத்தில் வந்துவிடும். மறுபடி குஞ்சிதபாத