பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12-வது அதிகாரம் மோக முஷ்கரம்

ந்தரமூர்த்தி முதலியார் பீட்டன் வண்டியில்

ஆ. மினியனையும் தமது வேலைக்காரனையும் * உட்காரவைத்துக்கொண்டு, மிகுந்த பதை பதைப்பும் ஆத்திரமும் தோற்றுவித்தவராய்க் இ குதிரையை விரைவாக விடுத்துக்கொண்டு தி கடற்கரையோரமாகத் தெற்குத் திக்கில் போன ரஸ்தாவில் சென்றார். அவ்வாறு சென்றபொழுது

வண்டியிலிருந்த மூவரும் தங்களது பார்வையை இரண்டு பக்கங்களிலும், முன் பக்கத்திலும் செலுத்தி, எவ்விடத்திலாகிலும் கோகிலாம்பாள் இருக்கிறாளோவென்று ஆராய்ச்சி செய்து கொண்டே சென்றனர். அப்பொழுது இளைய ஜெமீந்தார் மினியனை நோக்கி, “ஏனப்பா மினியா! நீ போலீஸ் இன்ஸ் பெக்டருடைய வீட்டு வாசலில் பெட்டிவண்டியண்டை காத்திருந்தாயே. அம்மாள் உள்ளே இருந்து வெளியில் வந்து உன்னைக் கண்டு, எதிர்பாராத விதமாய் நீ வந்திருந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்து உன்னிடம் ஏதாவது கேள்வி கேட்டார்களா?” என்று வினவினார்.

மினியன், “ஆமாஞ் சாமீ! கேய்வி கேட்டாங்க. நாம் தீர்மானம் சேஞ்சிக்கின மாதிரியே நானு சொல்லிப்புட்டேனுங்க. அத்தெ சரிதான்னு அவுங்க நம்பிப்புட்டாங்க” என்றான்.

சுந்தரமூர்த்தி முதலியார், ‘நானும் நீயும் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வந்தோமென்ற சங்கதியையாவது, நான் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறேனென்ற சங்கதியையாவது நீ அம்மாளிடம் சொல்லவில்லையே?’ என்றார்.

மினியன், “அதெல்லாம் நானு சொல்லுவேனுங்களா? ஒரு நாளுமில்லிங்க’ என்றான்.