பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2iO செளந்தர கோகிலம்

வரையில் செலவு செய்து சுவாமிக்கு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, நிவேதனம் முதலியவைகளை நடத்தி வைத்ததோடு ஏழைகளுக்கு அன்ன தானம் வஸ்திர தானம் முதலியவை களையும் தாராளமாக நடத்தி வைத்தார். உத்தரவு வந்து சேர்ந்த தினம் முழுதும் தந்தையும் புத்திரரும் அந்த அபார சந்தோஷத்தில் மெய்ம்மறந்து போயிருந்தனர். ஆதலால் அந்த உத்தரவின்மேல் தாம் எவ்விதமான நடவடிக்கை எடுத்துக் கொள்வதென்ற விஷயத்தில் தமது கவனத்தைச் செலுத்தாது இருந்தனர். மறுநாள் காலையில் அவர்கள் அந்த விஷயத்தைப்பற்றி யோசிக்கவாரம்பித்து முதலில் தஞ்சை ஜில்லா கலெக்டருக்கு ஒரு கடிதமெழுதி, அதில் குஞ்சிதபாத முதலியார் தமது மனமார்ந்த நன்றியறிதலை அவருக்கு அறிவித்துக் கொண்டார். சென்னைத் துரைத் தனத்தாரது உத்தரவின் முக்கிய அம்சங்கள் அடியில் வருவன:1. திருவடமருதூர் மிராசுதாரான குஞ்சிதபாத முதலியார் மார்படைப்பினால் பிரக்ஞை தவறியிருந்த சமயத்தில், அவரைச் சேர்ந்த மனிதர்களும் மற்றவர்களும் அவர் இறந்துபோய் விட்டாரென்று தப்பாக அபிப்பிராயப்பட்டு அவரை மயானத்தில் ஜதையில் வைத்துக் கொளுத்திவிட்டுச் சென்றனர் என்பதும், பிறகு அவர் இறக்காமல் இப்போதும் இருந்து வருகிறார் என்பதும், தஞ்சை ஜில்லா கலெக்டர் நடத்திய மகா திறமையான விசாரணையிலிருந்து சந்தேகமற நிச்சயப்படுவதால், அவர் இறக்கவில்லை யென்பதையும், அந்தத் தேதி வரையில் அவருக்கு இருந்து வந்த சொத்து சுதந்திரங்களின்மேல் அவருக்கு இருந்த உரிமை அப்படியே இருந்து வருகிறதென்பதையும் நாம் ஏற்றுக் கொள்வதோடு, இதை சர்க்கார் கெஜட்டுகளின் மூலமாகவும் தண்டோரா மூலமாகவும் பகிரங்கப்படுத்த உத்தரவு செய்கிறோம். 2. அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டும், அவரது மனைவியும், அவளுடைய தகப்ப னாரும் அவரது ஸ்தாவர சொத்துக்களை விற்றது தவறு. அவர் இறந்து போயிருந்தாலும், அவரது பெயரானது முடிவு தெரியாதிருக்கும் நிலைமையில் அதை அவர்கள் விற்றதும், மற்றவர் அதை வாங்கினதும் சட்டப்படி செல்லத்