பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 211

தக்க விஷயங்களல்ல. ஆயினும், அவர் அவற்றிற்காகக் கொடுக்கப்பட்ட தொகையைத் தாமே திருப்பிக் கொடுத்து விடுவதாக ஒப்புக் கொள்ளுகின்றார். ஆதலால், அந்தச் சொத்துக் களை வாங்கியவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவற்றை அவரிடம் ஒப்படைக்கக் கடமைப்பட்டவர்களாகி றார்கள். அவர்கள் அப்படிச் செய்யத் தவறினால், சிவில் கோர்ட் அதிகாரிகள் இந்த உத்தரவைத் தங்களுடைய டிக்ளிகள் போல பாவித்து, சட்டப்படி நிறைவேற்றி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். குஞ்சித பாத முதலியாருக்கு மற்ற ஜனங்கள் எவ்விதமான துன்பமும் இழைக்காமல் அவரையும் அவரது சுதந்திரங்களையும் பாதுகாக்கவும், அவரது மனைவி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அந்த அம்மாளை அவரிடம் ஒப்புவிக்கவும், எல்லா ஊர்ப் போலீசாரும் கிராம அதிகாரிகளும் அவருக்குத் தக்க உதவி செய்ய வேண்டு மென்று இதன் மூலமாய்க் கட்டளையிடுகிறோம். இவையே உத்தரவின் முக்கியமான அம்சங்கள்.

அந்த உத்தரவின் மேல் தாம் எவ்விதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதென்பதைப் பற்றி திவான் முதலியார் ஆழ்ந்து சிந்தனை செய்தார். தாம் அத்தனை தினங்களாய்த் தேடியலைந்தும், துப்பு விசாரித்தும், தாம் தமது இளைய தாயைக் கண்டுபிடிக்க இயலாமற் போனதை உணர்ந்த திவான் சாமியாருக்கு, அவள் எளிதில் அகப்பட மாட்டாளென்ற ஒரு சந்தேகம் தோன்றியது. ஆகவே, தமது தந்தையை அடிக்கடி தனிமையில் இருக்க விடுத்துத் தாம் வெளியூர்களுக்குப் போகவேண்டியிருக்கும் ஆதலால், தாம் தமது தந்தையைத் திருவடமருதூரில் தனியாக விடுத்துச் சென்றால், அவரது ஸ்தாவர சொத்துக்களை விலைக்கு வாங்கியவர்களோ மற்றவர்களோ அவர்மீது பகைமை பாராட்டி அவருக்கு ஏதேனும் தீங்கிழைப்பர் என்ற எண்ணம் உதித்தமையால், தாம் தமது இளைய தாயைக் கண்டுபிடிக்கிற வரையில் தமது தந்தை திருவையாற்றிலேயே இருப்பது அவருக்கு உசிதமாகப்பட்டது. அந்த யோசனையை அவர் கிழவரிடம் கூற, அவரும் அதுவே நலமானதென்று