பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர கோகிலம்

ஒப்புக்கொண்டார். அதுவுமன்றி சென்னை துரைத் தனத்தாரால் வெளியிடப்பட்ட உத்தரவோடு கிழவரது இளைய மனைவியான கமலவல்லி, அவளது தந்தை, தாய், தமயன் முதலியோரது அங்கமச்ச அடையாளங்களை விரிவாக எழுதிய குறிப்பையும் சேர்த்து லக்ஷக்கணக்கில் பிரதிகள் தயாரித்து, அவைகளைத் தஞ்சை ஜில்லா கலெக்டர் மூலமாகவும் மற்ற ஜில்லா கவெக்டர்கள் மூலமாகவும் எல்லா ராஜதானிகளிலுமுள்ள சகலமான ஊர்களின் கிராம முன்சீப்புகளுக்கும், போலீஸ் ஸ்டேஷன் களுக்கும் அனுப்பும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அவர்கள் இருவரும் முடிவு செய்தனர். அவ்வித அடையாள

ம் இன்னின்ன பெயர்களும் உள்ள மனிதர்கள் எந்த ஊரில் இருக்கிறார்களோ, அந்த ஊர் கிராம அதிகாரிகளோ, போலிசாரோ அதைப்பற்றி உடனே தமக்குத் தந்தி மூலமாய் அறிவிக்க வேண்டுமென்றும், அவர்கள் தம்மிடம் வரப் பிரியப்பட்டால், உடனே அவர்களை அழைத்து வந்து தம்மிடம் சேர்க்க வேண்டுமென்றும், அவர்கள் வர மறுத்தால், அவர்களைப் பிடித்துப் போலீஸ் பந்தோபஸ்தில் வைத்துத் தமக்கு உடனே தந்தி மூலமாய் அறிவிக்க வேண்டு மென்றும், அப்படிச் செய்வோருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என்றும் ஒரு வேண்டுகோளை யும் அந்த உத்தரவோடு சேர்த்துத் தயாரித்து அனுப்புவ தென்றும் அவர்கள் தீர்மானித்துக் கொண்டனர். உடனே திவான் சாமியார் சென்னையிலிருந்த பெரிய அச்சுக் கூடங்களில் இந்த உத்தரவையும் வேண்டுகோளையும் லக்ஷக்கணக்கில் அச்சியற்றி அவைகளைச் சகலமான ஜில்லாக்களின் கலெக்டர்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டுத் திருவையாற்றிற்கு வந்து சேர்ந்து விஷயத்தைத் தமது தந்தை யாரிடம் தெரிவித்தார். அந்த உத்தரவுகள் சுமார் ஒரு வார காலத்திற்குள் எல்லாக் கிராமங்களுக்கும் பரவி விடுமென்றும், சுமார் பத்து தினங்களுக்குள் எந்த ஊரிலிருந்தாவது தமக்குத் தந்தி வருமென்றும் உடனே கமலவல்லியைத் தாம் அழைத்து வந்து விடலாம் என்றும் அவர்கள் ஆவலோடு ஒவ்வொரு தினமும் எதிர்பார்த்துப் பார்த்து ஏக்கமும்