பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 215

ஆனாலும், அவளது மனம் அபாரமான தயாள குணத்தையும், காருண்யத்தையும் உள்ளடக்கிய மகாசிரேஷ்டமான மனம் என்பதை எல்லோரும் அறிந்து கொண்டிருந்தனர் ஆதலால், அவளது மனம் கோணாதபடி நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்ததன்றி, அவளிடம் அத்யந்த வாஞ்சையும், பாசமும் உடையவராய், அவளை மகா லக்ஷ சமியின் அவதாரமென்றே மதித்து வந்தனர். செளந்தரவல்லியைக் கண்டால், அவர்கள் நடுநடுங்கினர். அவள் உலக அநுபவத்தையும் பிறரது கஷ்ட சுகங்களையும் சிறிதும் அறியாத செல்லக் குழந்தை. தான் பிறருக்குக் கெடுதல் செய்யவேண்டுமென்றாவது, தான் துன்மார்க்கமான வழியில் நடக்க வேண்டுமென்றாவது அந்த மடந்தை எண்ணுகிறவளன்று. ஆனாலும், அவளிடத்திலும் தயாளம், பெருந்தன்மை, ஈகை, மற்ற ஒழுக்கத் தூய்மை முதலியவை சம்பூர்ணமாக நிறைந்திருந்தன. ஆனாலும், அவளிடம், தான் செய்வதே சரியான காரியம் என்றும், அதைப் பிறர் ஆக்ஷேபிக்காமல் அதற்கிணங்க நடந்துகொள்ள வேண்டு மென்றும் நினைக்கும் பிடிவாத குணம் பூர்த்தியாக நிறைந் திருந்தது. தான் எந்த விஷயத்திலும் அற்ப குற்றமும் செய்யாமல் ஒழுங்காய் நடப்பதாக அவள் அபிப்பிராயப்பட்டுக் கொண்டிருந் தமையால், பிறரிடம் அற்ப குற்றம் இருப்பதைக் கண்டாலும், அவளுக்கு அபாரமான கோபமும் வெறுப்பும் உண்டாகிவிடும். அவ்வாறு குற்றம் செய்தவர்களை அவள் நிரம்பவும் கடுமையாய் தண்டிப்பதோடு அதற்குப் பிறகு அவர்களது முகத்திலும் விழிக்க விரும்பமாட்டாள். தனது உத்தரவின்படி வேலைக்காரர் எவரேனும் கீழ்ப்படிந்து நடப்பதற்கு அற்ப காலதாமதம் ஏற்படுமானால்கூட அவள் உடனே அந்த வேலைக்காரரைப் பற்றித் தனது தாயிடம் கடுமையாகப் புகார் செய்து அவரை அலுவலினின்று நீக்கிவிட்டே மறுவேலை பார்ப்பாள். ஆதலால், அந்தப் பங்களாவிலிருந்த சுமார் இருபத்தைந்து சிப்பந்திகளும் அவளைப் பற்றி எப்போதும் சிம்ம சொப்பனம் கண்டு, அவள் எந்த வேலை இட்டாலும், அதை முதலில் நிறைவேற்றிய பின்னரே மற்ற அலுவல்களைக் கவனித்தனர்; அவளது கட்டளையென்றால் அதை அந்த rணத்தில் நிறைவேற்றி விட்டே மற்ற இருவரது காரியங்களையும் கவனிப்பார்கள்.