பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 2

பங்களாவிற்குத் திரும்பி வந்தவுடன் புஷ்டாவதி அந்தச் செய்தியை அந்த அம்மாளிடம் வெளியிடக் கடமைப்பட்டி ருந்தாள். அவ்வாறு அவள் வெளியிடாதிருப்பாளாயின், பிற்பாடு கோகிலாம்பாளும், அவளது தாயும் சந்தித்துப் பேச நேருமாத லால், அந்த முக்கியமான செய்தியைப் புஷ்பாவதி வெளியிடா மல் மறைத்ததைப் பற்றி அவள்மீது பெருத்த சம்சயம் ஏற்படும். ஆதலால், தாம் அந்தச் சம்சயத்திற்கு இடம் கொடாமல் முன் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டுமென்று புஷ்பாவதியும் செளந்தரவல்லியும் நினைத்து, பூஞ்சோலையம்மாள் வரும் பொழுது புஷ்பாவதி தனியான ஒர் அறைக்குள் படுத்துத் தூங்குவதுபோலப் பாசாங்கு செய்வதென்றும், தன் உடம்பின் நிலைமை சரியாக இல்லையாதலால், தானாக எழுந்து வருகிற வரையில் தன்னை யாரும் வந்து எழுப்ப வேண்டாமென்று புஷ்பாவதி சொல்லிவிட்டுப் படுத்துத் தூங்குவதாகச் செளந்தர வல்லி தனது தாயிடம் சொல்வதென்றும், இடையிடையில் என்னென்ன விசேஷ சம்பவங்கள் நடக்கின்றனவென்பதை செளந்தரவல்லியம்மாள் ஒரு வேலைக்காரியின் மூலமாக அவளுக்கு ரகஸியத்தில் சொல்லி அனுப்புகிறதென்றும் அவர்கள் தீர்மானித்துக்கொண்டு அதற்கு அனுகூலமான ஒர் அறையும் குறித்துக்கொண்டனர். அதுவுமன்றி, செளந்தரவல்லி தனது தாயையும், அக்காளையும் அவமானப்படுத்துவதை குரோத நினைவினால் வேண்டுமென்றே செய்வதாகக் காட்டிக்கொள்ள மல் எவ்விதக் கெட்ட கருத்தும் இன்றி அறியாமையினால் உள்ளதை உள்ளபடி எல்லோருக்கு முன்னும் வெளியிடுவது போலக் காட்டிக் கொள்ள வேண்டுமென்று புஷ்பாவதி தெரிவிக்க, அப்படியே செய்வதாக செளந்தரவல்லி ஒப்புக் கொண்டதன்றி, வேலைக்காரர்களுள் மூவரைப் பங்களாவுக்கு வெளியில் ரஸ்தாவில் இருக்கச் செய்து, தம்மைச் சேர்ந்த மனிதர் யார் வந்தாலும், அவர்கள் தூரத்தில் வரும்பொழுதே பார்த்துத் தெரிந்து கொண்டு ஓடிவந்து தன்னிடம் அந்தச் செய்தியைக் கூறும்படி அமர்த்தியிருந்தாள்.

அன்றைய தினம் காலையில் புறப்பட்டுச்சென்ற கோகிலாம் பாள் இரவு வரையில் திரும்பி வராததைப் பற்றியும், அவளைத் தேடிச் சென்ற பூஞ்சோலையம்மாளும் வராமையைப் பற்றியும்