பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 செளந்தர கோகிலம்

வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் மிகுந்த கவலையும் கலக்கமும் மனவேதனையும் கொண்டு தவித்து ஆவலே வடிவாகத் துடிதுடித்திருந்தனர். செளந்தரவல்லியம்மாளோ அவர்களெல்லோரையும்விடப் பன்மடங்கு அதிகரித்த கவலையும் மனத் துடிப்பும் அடைந்தவள்போல வேலைக்காரர்களுக்கு எதிரில் நடித்து, அடிக்கடி தனது கைகளைப் பிசைந்துகொண்டு, “என்ன துன்பம் இது அக்காளும் வரவில்லை! அம்மாளும் வரவில்லையே! அவர்களுக்கு என்னவிதமான அபாயம் நேரிட்டுவிட்டதோ தெரியவில்லையே! அவர்களைத் தவிர எனக்கு இந்த உலகத்தில் வேறு உற்றார் யார் இருக்கிறார்கள்! அவர்களை இழந்துவிட்டு நான் எப்படி உயிர்வாழப் போகிறேன்! ஐயோ தெய்வமே இந்த அபாய வேளையில் நீதான் எனக்குத் துணையிருக்க வேண்டும்,’ என்றும், வேறு பலவாறாகவும் கூறிப் பிரலாபித்து சோகரஸம் நடித்துக் காட்டியபடி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள்.

அவ்வாறு ஒரு நாழிகைகாலம் கழிந்தது. பூஞ்சோலையம்மாள் வந்து சேர்ந்தாள். அந்த அம்மாளினது அப்போதைய மனநிலைமை விவரித்துக் கூறுவதற்குச் சிறிதும் சாத்தியமற்ற பரம சங்கடமான நிலைமையாக இருந்தது. அந்த அம்மாள் போலீஸ் ஸ்டேஷன், சப் ஜெயில், மாஜிஸ்டிரேட்டின் கச்சேரி, போலீஸ் இன்ஸ்பெக் டரது மாளிகை முதலிய இடங்களுக்குச் சென்று முடிவில், கோகிலாம்பாள் போலீஸ் இன்ஸ்பெக்டராலேதான் வஞ்சிக்கப் பட்டிருக்க வேண்டுமென்ற தீர்மானத்துடன் திரும்பி பங்களா விற்கு வந்ததாக முன்னரே கூறியிருக்கிறோம். கோகிலாம்பாள் மனத்திண்மையும், கற்புநிலை தவறாத் தன்மையும் வாய்ந்த உத்தம குணப் பெண்மணி. ஆதலால், அவள் இன்ஸ்பெக்டரது சூழ்ச்சி வலையிற்பட்டு அதிலிருந்து தப்ப மாட்டாமல், ஒருக்கால் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பாளோ என்ற எண்ணமே அந்த அம்மாளினது மனத்தில் உறுதியாக எழுந்தது. ஆகையால், அவளது நிலைமை கட்டிலடங்காத மகா கொடிய நிலையாக இருந்தது. அத்தனை வருஷ காலம் தங்கப் பதுமை போலத் தான் வளர்த்த தனது அருங்குணப் புதல்வியைத் தான் இனி உயிருடன் காண முடியாமல் போய்விடுமோ என்ற கவலை அந்த அம்மாளின் உயிரை ஓயாது பருகியபடி இருந்தது. அவள் திடீரென்று காணாமல் போனதைப் பற்றி, தான் பிறருக்கு எவ்விதமான