பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 22 i.

அதைக்கேட்ட பூஞ்சோலை யம்மாளினது நிலைமை முன்னிலும் பன்மடங்கு கேவலமானதாகி விட்டது. அவளது மன வேதனை அபரிமிதமாகப் பெருகியது. அத்தனை சிப்பந்திகளுக்கு முன்னால் கோகிலாம்பாளைப் பற்றிய உண்மையை வெளியிட அந்த அம்மாளுக்குச் சிறிதும் மனமொப்பவில்லை. வெளியிடாமல் விஷயத்தை அடியோடு மறைத்து வைப்பதும் அநுசிதமாகப் படவில்லை. தான் தனது இளைய புதல்வியைத் தனியாக அழைத்துப் போய் அவளிடத்தில் மாத்திரம் ரகளியமாகச் சில தகவல்களைக் கூறலாம் என்றாலோ, அது சிப்பந்திகளுக்கு சந்தேகாஸ்பதமாகத் தோன்றும். ஆகவே, இந்த இக்கட்டான நிலைமையில் தான் எவ்விதமாக நடந்து கொள்வதென்பதை நிச்சயிக்க மாட்டாதவளாய்ப் பூஞ்சோலையம்மாள் சிறிதுநேரம் தவித்துத் தயங்கி மெளனமாயிருந்த பின்னர் செளந்தரவல்லியை நோக்கி நிரம்பவும் வாஞ்சையாகவும் பகrமாகவும் பேசத் தொடங்கி, “செளந்தரா கொஞ்சம் பொறம்மா! நான் போய் வந்த அலுப்பில், என்னால் வாய் திறந்து கூடப் பேசமுடியவில்லை. கொஞ்சம் களைப்புத் தீர்ந்தவுடன், எல்லாச் சங்கதியையும் சொல்லுகிறேன்’ என்று கூறினாள்.

அதைக்கேட்ட செளந்தரவல்லி தனது தாயின் மனநிலை மையை ஒருவாறு யூகித்துணர்ந்து கொண்டாள். உண்மையை வெளியிட இஷ்டமில்லாமையால் தனது தாய் அவ்வாறு சாக்குப் போக்குச் சொல்லுகிறாள் என்று நினைத்துக் கொண்ட அந்த மடந்தை முன்னிலும் நயமாகவும் பணிவாகவும் தனது தாயை நோக்கி, ‘அம்மா தங்களுக்குக் களைப்பாக இருந்தால், தாகத்துக்கு ஏதாவது கொண்டுவரச் சொல்லட்டுமா? அல்லது ஆகாரம் ஏதாவது வரவழைக்கட்டுமா? நீங்கள் என்றைக்கும் இல்லாமல் இன்று இப்படிப் புதுமாதிரியாக நடந்துகொள்வது எங்களுக்கு நிரம்பவும் வேதனையாக இருக்கிறது. முக்கியமாக அக்காள் உங்களோடு வரவில்லையே என்கிற விஷயந்தான் எங்களைக் கொல்லுகிறது. கொஞ்சம் பொறுக்கும்படி நீங்கள் சொல்லுகிறீர் கள். எங்கள் மனம் அந்தக் கொஞ்ச நேரத்திற்குள் பைத்தியங் கொண்டு விடும் போலிருக்கிறது. நீங்கள் அதிகமாகப் பேச வேண்டாம். இரண்டொரு வார்த்தையில் சங்கதியைச் சொல் லுங்கள்” என்று நயமாக வற்புறுத்திக் கூறினாள்.