பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 223

வரும்படி கூப்பிட்டால், அக்காள் அங்கே போகலாமா? போனாலும் இரவு நேரம் வரையில் வீட்டை நினைக்காமல் இருக்கலாமா? நாமெல்லோரும் அக்காளைப் பற்றிக் கவலைப் படுவோம் என்ற விஷயம், எவ்வளவோ புத்திசாலியான அக்கா ளுக்குத் தெரியாதா? அவளென்ன அறியாத குழந்தையா? காரியம் அந்த மாதிரி நடந்திருக்குமாவென்பது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்றாள்.

பூஞ்சோலையம்மாள், ‘தான் சீக்கிரமாக வந்துவிடலா மென்று அந்த இடத்துக்குப் போயிருக்கலாம். போன இடத்தில் எதிர்பாராத இடைஞ்சல் ஏதாவது நேரிட்டிருக்கலாம். அதனால், அவள் உடனே புறப்பட்டு வர முடியாமல் போயிருக்கலாம். வேறு மனிதரையும் அனுப்பக்கூடாத நிலைமையில் இருக்கலாம். எதையும் நாம் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை’ என்றாள்.

செளந்தரவல்லி, ‘ஆம். வாஸ்தவந்தான். நீங்கள் சொல்வது போலவும் காரியம் நடந்திருக்கலாம். காலையில் அக்காள் போனது நம்முடைய சொந்தக்காரர்களுடைய வீட்டுக்கா அல்லது இதற்கு முன் நம்முடன் அதிகமாய்ப் பழகாத அன்னிய மனிதருடைய வீட்டுக்கா? என்றாள்.

பூஞ்சோலையம்மாள் சிறிது நேரம் யோசனை செய்தாள். தான் உண்மையை மறைத்து ஒரு பொய் சொன்னதிலிருந்து மேன்மேலும் பொய்யான தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகவேண்டியிருக்கிறது என்ற கவலையும் கலக்கமும் அடைந்தாள். ஆனாலும், முதலில் சொன்னதை மாற்றிக் கூற வேறு வகையில்லாது இருந்தமையால், கோகிலாம்பாள் உறவினரான ஒருவரது வீட்டிற்கே போனாள் என்பதை ஊர்ஜிதப்படுத்துவதே உசிதமானதெனத் தீர்மானித்துக் கொண்டாள். அதற்கு முன் பழக்கமில்லாத அன்னியரது வீட்டிற்கு, யெளவனக் குமரியான கோகிலாம்பாளை அனுப்புவதென்றால், அது வேலைக்காரர் களுக்குச் சம்சயமாகவும், விகாரமாகவும் தோன்றுமென்று நினைத்துக்கொண்ட பூஞ்சோலையம்மாள், “என்ன கண்ணு! நீ இந்தக் கேள்வியைக் கேட்கவும் வேண்டுமா? இதற்கு முன் பழகாத அன்னியர் வீட்டுக்கு நம்முடைய கோகிலாவை அனுப்புவேனா. நம்முடைய சொந்தக்கார மனிதருடைய வீட்டுக்குத்தான் அனுப்பினேன்” என்றாள்.