பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 செளந்தர கோகிலம்

செளந்தரவல்லி : ஒகோ அப்படியா நான் அதிக விவேக மில்லாத சின்னப் பெண்தானே! நீங்கள் சொன்னால்தான் எதுவும் எனக்குத் தெரிகிறது. நானே இதையெல்லாம் அவ்வளவு குறியாக யூகிக்க என்னால் முடியுமா? அக்காள் நல்ல விவேகி அவளாக இருந்தால், எதையும் சரியானபடி யூகித்துச் சரியாகச் சொல்லி விடுவாள். ஆம் அம்மா! அது இருக்கட்டும். நீங்கள் அக்காளை யார் வீட்டுக்கு அனுப்பினர்கள்? -

பூஞ்சோலையம்மாள் : (நிரம்பவும் தவித்துப்போய்த் தான் மேன்மேலும் பொய் சொல்ல நேருகிறதேயென்று நினைத்துத் தத்தளித்து, அப்பொழுது தான் பின் வாங்குவது உசிதமல்ல வென்று நினைத்து) இதோ ராயபுரத்தில் உன்னுடைய சிற்றப்பா வுக்கு மருமகப்பிள்ளை இருக்கிறாரல்லவா? அவருடைய வீட்டுக்குத்தான் போனாள்.

செளந்தரவல்லி : ஒகோ அப்படியா. இன்க்ம்டாக்ஸ் கலெக்டர் ஆபீசில் பெரிய மானேஜர் வேலையில் இருப்பதாகச் சொன்னார்களே. அந்த ஐயாவின் வீட்டுக்குத்தானே? அவர் களுடைய பெயர் பொன்னுரங்க முதலியார் இல்லையா?

பூஞ்சோலையம்மாள் : ஆம். அவருடைய வீட்டுக்குத்தான் போனது.

செளந்தரவல்லி : ஏனம்மா, நம்முடைய கோகிலா அந்த ஐயாவுடன் இதற்குமுன் பேசிப் பழகியதுண்டா? இதற்குமுன் அவள் அவருடன் பேசியிருந்தாலும் அவர் அவ்வளவு நெருங்கிய பந்துவல்ல. ஆகையால் புத்தியறிந்த பெண்ணான நம்முடைய கோகிலா இப்போது அவருடன் பேசுவது ஒழுங்காகுமா?

பூஞ்சோலையம்மாள் : கோகிலா அவரோடு பேசுவாளா. அவருடைய சம்சாரத்துடன்தான் பேசுவாள். x.

செளந்தரவல்லி : ஓகோ அப்படியானால் சரிதான். அதிருக்கட்டும். நானும் எத்தனையோ வருஷ காலமாய்ப் பார்த் திருக்கிறேன். நம்மிடம் யாராவது எதைப் பற்றியாவது பேச இஷ்டப்பட்டால், அவர்களே நேரில் இங்கே வந்திருக்கிறார் களேயன்றி இப்படி யாரும் நம்மைக் கூப்பிட்டதில்லையே. அதுவும் நம்முடைய கோகிலா மாத்திரம் தனியாய்ப்