பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 செளந்தர கோகிலம்

பூஞ்சோலையம்மாள் : செளந்தரா கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள். நான் எல்லாச் சங்கதியையும் உன்னிடம் விவரமாகச் சொல்லுகிறேன். நம்முடைய கோகிலா இன்னமும் வீட்டுக்கு வரவில்லையே என்ற கவலையினால் எனக்கு இப்போது புத்தி சுவாதீனத்தில் இல்லை. உன்னோடு நான் என்ன பேசுகிறே னென்பது கூடத் தெரியவில்லை. கொஞ்சநேரம் நான் பேசாமல் இப்படியே நிம்மதியாகப் படுத்திருந்தால்தான், என் உடம்பு கட்டுக்கடங்கும் போலிருக்கிறது. கொஞ்சம் பொறம்மா.

செளந்தரவல்லி : சரியம்மா! இப்படியே படுத்துக் களைப் பாருங்கள். நீங்கள் யாருடனும் பேச வேண்டாம். எல்லா விஷயங் களையும் இனி நானே கவனிக்கிறேன் - என்று கூறினாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் எல்லா வேலைக்காரர் களும் சூழ்ந்து நிற்கையில் செளந்தரவல்லி அநுசிதமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போனதைப் பற்றி மிகுந்த சஞ்சலமும் வேதனையும் அடைந்து, அவள் எப்பொழுது ஒய்வா ளென்று ஆவலோடு எதிர்பார்த்தாள். ஆதலால், அவள் அவ்வளவோடு தன்னை விட்டதைப்பற்றி மிகுந்த ஆறுதலடைந்து தனது கண்களை மூடிக்கொண்டு துவண்டு லோபாவில் சாய்ந்து கொண்டாள். அங்கு கூடிநின்ற வேலைக்காரர்கள் எல்லோரும் பூஞ்சோலையம்மாள் கூறிய வரலாற்றை உண்மையென்றே நம்பி கோகிலாம்பாள் காணாமல் போயிருந்ததைப் பற்றி அளவற்ற கலக்கமும் குழப்பமும் திகிலும் அடைந்து சகிக்கவொண்ணாத கவலையும் வேதனையும் கொண்டு தவித்து நின்றனர். அப்பொழுது செளந்தரவல்லியம்மாள் சிறிது தூரம் அப்பால் சென்று ஒரு வேலைக்காரனை அழைத்து ரகசியமாக அவனுடன் பேசி, இராயபுரத்திலிருக்கும் பொன்னுரங்கம் முதலியார் வந்தால், அவரை அழைத்துக் கொண்டுபோய்த் தனியான ஒர் அறையில் உட்கார வைத்துவிட்டுத் தன்னிடம் வந்து தெரிவிக்கும்படி கூறி அவனை வெளியில் அனுப்பி வைத்தபின், இன்னொரு வேலைக் காரியை அழைத்து கோகிலாம்பாள் வரும் பrத்தில், அவளை அவ்விடத்திற்கு அழைத்து வராமல் தனியான ஒரு விடுதிக்கு அழைத்துப் போகும்படி கூறி அவளையும் அனுப்பிவிட்டுத் தனது தாய்க்கு அருகில் வந்து சேர்ந்தாள். பிறகு கால்