பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 21

உன்மேல் சம்சயம்கொள்ளுவார்கள். நான் சொல்வது தெரிகிறதா?’ என்றார்.

உடனே மினியன், “ஆமாஞ்சாமி! அதுக்காவத்தான் நானே அப்பிடிச் சொன்னேன்! இந்த ஒசனெயெல்லாம் எனக்கு இல்லேன்னு பார்த்துக்கினிங்களா! நானு இன்னெ நேத்தே மனிசனா, நானு அம்பது வருசத்தெ முளுங்கி கொட்டையும் போட்டுப் பயமும் துன்ன மனிசனல்லவா எசமானே!” என்றான்.

அதைக்கேட்ட இளைய ஜெமீந்தார் அவனைப் பார்த்து வேடிக்கையாகப் புன்னகை செய்து, ‘நீ கெட்டிக்காரன் தான். ஆனால், பட்டப் பகலில்தான் கோட்டை விட்டுவிட்டாய்! இவ்வளவு தூரம் சாமர்த்தியம் செய்து, பெண்ணைப் பாலம் வரையில் கொண்டுவந்து நீ பக்கத்தில் இருந்தபோதே எவனோ வண்டியை ஒட்டிக்கொண்டு போயிருக்கிறானே. அதைக் கவனிக்காமல் நீ ஏமாறிப் போய்விட்டாயே. பெண் இப்போது எவர் வகத்தில் எவ்வளவு தூரம் இருக்கிறதோ என்னவோ தெரிய வில்லையே! பெண்ணுக்கு ஏதாவது அபாயம் நேர்ந்துவிடும் பகrத்தில் வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தவனான உன்னைத் தானே எல்லோரும் ஜெவாப்தாரியாக்குவார்கள்’ என்றார்.

அதைக் கேட்ட மினியன் மிகுந்த திகிலும் நடுக்கமும் அடைந்து, “ஆமாஞ்சாமி, எசமாஞ் சொல்றது. மெய்யான பேச்சுதானுங்க. என்னமோ எசமானுக்காவ நான் இம்பிட்டு தூரம் பித்தலாட்டம் சேஞ்சுப்புட்டேனுங்க. எனக்கு எந்தத் தொந்தரையும் வராமே எசமாந்தான் பார்த்துக்கணுங்க” என்று நிரம்பவும் பணிவாகவும் நயமாக இறைஞ்சியும் கூறினான்.

சுந்தரமூர்த்தி முதலியார், “சரி இருக்கட்டும். உனக்கு எவ்வித உபத்திரவமும் இல்லாமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். நீ மாத்திரம் முன்னே சொன்னதுபோலவே எப்போதும் சொல்லி விடு. உனக்கு எவ்விதமான கெடுதலும் உண்டாகாமல் பார்த்துக்கொள்ள நானாயிற்று. அவர்கள் உன்னை வேலையிலிருந்து நீக்கினால், ஏற்கனவே நான் வாக்குறுதி செய்து கொடுத்திருப்பது போல, இப்போது உனக்குக் கிடைப்பதைவிட இரட்டிப்புச் சம்பளம் கொடுத்து உன்னை நானே வைத்துக்