பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23C செளந்தர கோகிலம்

ஆபீஸ் சூபரின்டென்டெண்ட் ஞானசாகர முதலியார், அவரது மனைவி, மெடிகல் காலேஜ் புரோபஸர் செல்வரங்க முதலியார், அவரது மனைவி, இஞ்சினியர் சிங்காரவேலு முதலியார் அவரது மனைவி, மயிலை கபாலீசரம் தர்மகர்த்தா மாதவராய முதலியார், அவரது மனைவி, ஹைகோர்ட் வக்கீல் சீனிவாச முதலியார், அவரது மனைவி, சாண்ட் பாங்கி காசியர் சதாசிவ முதலியார், அவரது மனைவி, ஹம்பக் இன்ஷாரன்ஸ் கம்பெனியின் டைரக்டர் சடகோப முதலியார், மூர்மார்க்கெட் லாட்டரி அண்ட் கம்பெனி மூர்த்தி முதலியார், அவரது மனைவி, மோசம்பேட்டை ஜெமீந்தார் அண்ணாத்தை முதலியார் முதலிய கன தனவான்களும் அவரது சீமாட்டிமார்களும் ஜாஜ்வல்லியமாக மின்னிய வைர ஆபரணங்கள் பட்டாடைகள் முதலியவை நிறைந்தவர்களாய் வெகு ஆடம்பரமாக உள்ளே வந்து தடதடவென்று நுழைந்து விட்டனர். மிகுந்த கண்ணியமும் பெருமைப்பாடும், நாகரீகமும், புத்திசாலித்தனமும் வாய்ந்தவர்களான அத்தனை உறவினர்களை யும் காணவே, பூஞ்சோலையம்மாளின் நாடி முற்றிலும் தளர்ந்து போயிற்று. பெருத்த திகிலும் கலக்கமும் நடுக்கமும் தளர்ச்சியும் உண்டாகிவிட்டன. அந்த அம்மாள் தட்டித் தடுமாறி எழுந்து சுவரின் ஒரு மூலையைப் பிடித்துக்கொண்டு குனிந்து நின்ற வண்ணம் ஜனங்களை நோக்கி, ‘வாருங்கள். வாருங்கள். நாற்காலிகளில் உட்கார்ந்து கொள்ளுங்கள்’ என்று மிருதுவான குரலில் கூறி உபசரித்தாள். அதற்கு மேல் அந்த அம்மாளால் பேச இயலாமற் போய்விட்டது.

அவ்வாறு வந்த ஜனங்கள் ஆண்பாலாரும் பெண்பாலாரும் வெவ்வேறாகப் பிரிந்து இரண்டு கும்பல்களாக வந்தனர். ஆகவே செளந்தரவல்லி பெண்பாலாரின் கும்பலை நோக்கிச் சென்று அவர்களை வரவேற்று உட்காரச் செய்தாள். உடனே வக்கீல் சீனிவாச முதலியார் செளந்தரவல்லியை நோக்கி, ‘என்ன குழந்தை அம்மாள் எங்கேயோ காணாமல் போய்விட்டதாக டெலிபோனில் சொன்னாயே! அம்மாள் எப்போது திரும்பி வந்தார்கள்? எங்கே போயிருந்தார்கள்? கோகிலா எங்கேயோ போனதாகச் சொன்னாயே? அது திரும்பி வந்ததா இல்லையா?” என்றார். -