பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 231

உடனே செளந்தரவல்லி அவரை நோக்கி, ‘அம்மாள் இப்போதுதான் கொஞ்ச நேரத்துக்குமுன் வந்தார்கள். அக்காள் போன இடந் தெரியவில்லை” என்றாள்.

அதைக் கேட்ட உறவினருள் பலர் மிகுந்த வியப்பும் கவலையும் தோற்றுவித்து, “என்ன ஆச்சரியம் இது! கோகிலா வென்ன சிறு குழந்தையா? அவள் வயசான பெண். நல்ல விவேகி. அவள் காணாமல் போகிறதென்றால், அது கொஞ்சமும் நம்பத்தகாத சங்கதியாக அல்லவா இருக்கிறது! காலையில் அவள் யாருடைய வீட்டுக்குப் போனாள்?’ என்று கேள்வி கேட்கலாயினர்.

உடனே செளந்தரவல்லி, “அக்காள் எங்கே போனாள் என்ற விவரம் எனக்கு இதுவரையில் தெரியாது. இப்போதுதான் அம்மாள் சொல்ல, அதை நான் தெரிந்து கொண்டேன். இன்கம் டாக்ஸ் கலெக்டர் ஆபீஸ் மானேஜர் உத்தியோகத்தில் இருக்கும் ஐயா ராயபுரத்தில் இருக்கிறார்களல்லவா. அவர்கள் இன்று காலையில் ஒரு கடிதம் அனுப்பினார்களாம். ஏதோ அவசரமான விஷயத்தைப்பற்றி அம்மாளுடன் பேசவேண்டு மென்றும், அம்மாள் உடனே புறப்பட்டு வரவேண்டு மென்றும், அவர்கள் எழுதி இருந்தார்களாம். கற்பகவல்லியம்மாள் தாம் தற்கொலை செய்து கொள்ளுவதாக ஒரு கடிதம் எழுதி வைத்து நேற்றிரவு சொல்லாமல் புறப்பட்டு எங்கேயோ போய்விட்டார்கள். அவர்களைத் தேடி அழைத்து வரும்படி அம்மாள் மனிதர்களை அனுப்பினார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது. அந்த அம்மாளைப் பற்றி ஏதாவது தகவல் திடீரென்று கிடைத்தால் தாம் அதற்குத் தகுந்த அவசரமான நடவடிக்கை ஏதாவது எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கு மென்று நினைத்து அம்மாள் இங்கேயே இருந்துகொண்டு, கோகிலாவைத் தனியாக ராயபுரத்திற்கு அனுப்பி வைத்தார்களாம். காலையில் போன கோகிலா மத்தியானம் நாலுமணி வரையில் திரும்பி வராததைக் கண்டு அம்மாள் கவலைப்பட்டு, அவளைத் தேடிக்கொண்டு புறப்பட்டுப் போனார்களாம்! போய்விட்டு இப்போதுதான் திரும்பி வந்தார்கள். அம்மாள் ராயபுரத்திலுள்ள அந்த ஐயாவின் வீட்டுக்குப் போய் விசாரித்ததில், கோகிலா வந்து கொஞ்ச நேரம்