பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 233

உடனே சடகோப முதலியார், “இரண்டும்தான் இருக்கும். அவரென்ன இலேசான மனிதரா. நேற்று நம்முடைய ரென்பென் னெட் கம்பெனியில் அவர் 7 ரூபாய் சம்பளத்தில் பார்சல் கட்டுகிற வேலையில் தொண்ணாந்து நின்றவர் இன்று இன்கம் டாக்ஸ் ஆபீசில் முன்னுறு ரூபாய் வாங்கினால், அவருடைய கெளரதை எவ்வளவு தூரம் உயர்ந்துவிட்டது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன். அப்பேர்ப்பட்ட சீமான் தானே இங்கே வருவாரோ இவர்கள்தான் அவரிடம் போக வேண்டும்.” என்று நிரம்பவும் குத்தலாக மொழிந்தார். உடனே மாதவராய முதலியார், “அதைப் பற்றி நாம் விசாரிக்காமல், அவர் பேரில் குறை கூறுவது சரியல்ல. ஒருவேளை அவரே வர முடியாதபடி ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், குழந்தை கோகிலா தனியாக அங்கே போயிற்றல்லவா. அதன் பிறகாவது அவர்கள் கொஞ்சம் எச்சரிப்படைந்து, பெண் திரும்பி வந்தபோது, அதை ஜாக்கிரதையாக வீட்டில் கொண்டுவந்து விடும்படி யாரையாவது மனிதரைத் துணையாக அனுப்பி இருக்கக்கூடாதா. அல்லது அவருடைய சம்சாரம்தான் பெண்ணை இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகலாகாதா? சில மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தங்களுக்கென்றால் ஒரு நியாயம்; மற்றவருக் கென்றால் இன்னொரு நியாயம். அவருடைய சொந்தப் பெண்ணாக இருந்தால், அவர் இப்படி நிராதரவாக அனுப்பு வாரா?” என்று நிரம்பவும் இளக்காரமாக மொழிந்தார்.

வக்கீல் சீனிவாச முதலியார், அதெல்லாம் போகட்டும். பெண் அவ்விடத்தை விட்டு வந்தபிறகு, பெரியம்மாள் அங்கே போய்ப் பெண் பங்களாவுக்கு வரவில்லையென்று சொல்லித் தேடினார்களே, அவர் ஒழுங்கான மனிதராக இருந்தால், அப்போது அவர் என்ன செய்யவேண்டியது. இந்த அம்மாளோடு அவரும் கூட வந்து எங்கெங்கே போய்த் தேடவேண்டுமோ அங்கங்கே போய்த் தேட வேண்டும்; அதுவுமன்றி இப்போது இங்கேயும் வந்திருக்க வேண்டுமல்லவா. எதிலும் சம்பந்தப் படாமல் இப்படி அன்னிய மனிதர் போல நடந்து கொண் டிருக்கும் அவர் என்ன விதமான ரகஸியச் செய்தியை இவர் களுக்குச் சொல்லியிருப்பாரென்பது தெரியவில்லையே!” என்றார்.