பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 235

பிறக்கும். அல்லது சிலர் உடனே அந்த ஸ்டேஷனுக்குப் போய்க் கேட்பார்கள். தான் சொன்னது பொய்யாகி விடும். தான் பதிய வைக்கவில்லையென்றால், யாராவது உடனே ஒடி கோகிலாம்டாள் பொன்னுரங்க முதலியாரின் வீட்டுக்குப் போனது முதலிய பொய்த் தகவல்களையெல்லாம் மெய் போல எழுதி வைப்பார்கள். உடனே போலீசார் பொன்னுரங்க முதலியாரிடம் போய் விசாரித்தாலும் விசாரிக்கலாம். அவர் எல்லாம் பொய்யென்று மறுப்பது நிச்சயம் என்று பூஞ்சோலையம்மாள் பலவாறு எண்ண மிட்டுத் தத்தளித்து, ‘அம்மா செளந்தரா கோகிலா அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டாள் என்ற செய்தியைக் கேட்ட பிறகு என் புத்தியே ஸ்வாதீனத்தில் இல்லாமல் போய்விட்டது. அதன் பிறகு நான் எங்கெங்கே போனேனென்பதே எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. என் மனம் இப்போது முன்னிலும் அதிகமாக கலங்கிப் போயிருப்பதால், எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றாள்.

உடனே செளந்தரவல்லி, ‘அப்படியா ராயபுரத்திலுள்ள பொன்னுரங்க முதலியார் அவர்களுடைய வீட்டுக்கு நீங்கள் போனது நிச்சயமாக நினைவிருக்கிறதல்லவா? நினைவில்லா விட்டால் இப்போது வேறே யாரையாவது அங்கே அனுப்பி வைக்கிறோம்” என்றாள்.

பூஞ்சோலையம்மாள், “அங்கே போய்விட்டு வந்ததாகத்தான் நினைவிருக்கிறது” என்றாள்.

செளந்தரவல்லி, “நீங்கள் அங்கே இருந்து புறப்பட்டு வந்த போது, அந்த வீட்டு முதலியார் உங்களோடு வரவில்லையா?” என்றாள்.

பூஞ்சோலையம்மாள், “வரவில்லை. கோகிலா ஒருவேளை வேறே வழியாக இங்கே வந்து சேர்ந்திருப்பாளோ என்று நாங்கள் நினைத்தோம். ஆகையால், அப்போது எங்கள் மனசில் அவ்வளவு பயம் ஏற்படவில்லை. அந்த ஐயாவும் கூட வந்து தேட வேண்டு மென்ற எண்ணம் உண்டாகவில்லை. ஆகையால் அவர்கள் வர வில்லை’ என்றாள்.

செளந்தரவல்லி, “அப்படியானால் நீங்கள் உடனே நேரில் இவ்விடத்திற்கு வந்து பார்க்க வேண்டுமல்லவா. அதைவிட்டு