பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 செளந்தர கோகிலம்

கொள்ளுகிறேன். நீ இன்னொரு விஷயத்தையும் கொஞ்சம் மாற்றிச் சொல்லவேண்டும். நான் இப்போது இங்கே வந்து உன்னைக் கண்டு அழைத்துக்கொண்டு வந்ததாக நீ சொல்ல வேண்டாம். நீ பாலத்தின் அடியில் கொஞ்சநேரம் இருந்துவிட்டு உடனே மேலே வந்து பார்த்ததாகவும், வண்டி காணாமல் போகவே நிரம்பவும் கவலைப்பட்டுத் தேட ஆரம்பித்ததாகவும், வடக்குத் திசையிலிருந்து உனக்குப் பழக்கமான மனிதர் ஒருவர் வந்ததாகவும், வண்டி வடக்குத் திக்கில் போகவில்லை என்று அவர் சொன்னதாகவும், பிறகு நீ தேடிக்கொண்டே தெற்குத் திக்கில் ஒடி வந்ததாகவும், ஒருக்கால் அந்த அம்மாள் என்னுடைய பங்களாவுக்கு வந்திருக்கலாமோ என்று நினைத்து நீ என் பங்களாவுக்கு வந்து என்னைக் கண்டு சங்கதியை எல்லாம் சொன்னதாகவும், அதைக் கேட்டவுடன் நான் வண்டியில் உன்னையும் என் ஆளையும் வைத்துக்கொண்டு தேடப் புறப்பட்டதாகவும் நீ சொல்லவேண்டும். அவ்வளவு தான். வேறு அதிகமாய் எதையும் நீ சொல்லவேண்டாம். நான் பெரிய பதவியில் இருப்பவன். பெண்ணும் அதுபோலவே தக்க பெரிய மனிதர் வீட்டுப்பெண். அவர்களுடைய வீட்டில் நான் பெண் கொள்ளப் போகிறேன். அந்தப் பெண்ணை இவ்வளவு தூரம் தெற்கே கொண்டுவந்த விஷயத்தில் நானும் ஒருவேளை சம்பந்தப்பட்டிருப்பேனோ என்ற சந்தேகமே எவருக்கும் உண்டாகக் கூடாது. தெரிகிறதா?” என்றார்.

மினியன், “அப்படியே ஆவட்டும்!” என்றான். உடனே சுந்தரமூர்த்தி முதலியார் மிகுந்த கவலையும் விசனமும் கொண்டவர்போலக் காட்டிக்கொண்டு, ‘பிள்ளையார் பிடிக்க, அது குரங்காய் முடிந்த கதையாய், நாம் ஏதோ ஒரு காரியம் செய்ய எண்ணினோம். அது வேறொன்றாய் முடிந்து போய்விட்டது. இந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்து இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டுமென்று நான் நினைத்து வண்டியை இப்படி ஒட்டிக்கொண்டு வரும்படிச் சொன்னால், அது இப்படிப்பட்ட எதிர்பார்க்காத துன்பமாய் முடிந்திருக்கிறது. எப்படியாவது தெய்வச் செயலால் பெண் நம்முடைய கண்ணில் பட்டுவிடுமானால், அதுவே போதுமானது.