பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24O செளந்தர கோகிலம்

கிறீரே!” என்றார். அதைக் கேட்ட பொன்னுரங்க முதலியார் அப்போதே நிமிர்ந்து பார்த்துப் பூஞ்சோலையம்மாள் நின்றதைக் கண்டு, ஓகோ அம்மாள் திரும்பி வந்துவிட்டார்களா? பெண் இன்னமும் வரவில்லையா’ என்று நிஷ்கபடமாகக் கூறினார். அதைக் கேட்ட மூர்த்தி முதலியார் முன்னிலும் அதிக ஆத்திர மடைந்து, “என்ன ஐயா நீர், கதையா பண்ணுகிறீர்? ஐயா! பொன்னுரங்க முதலியாரே! நான் நல்ல மாதிரியாகச் சொல்லு கிறேன். வீணாய் நல்ல உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதேயும். நான் செய்ததற்குச் சாட்சி யார் இருக்கிறார்கள். இவர்கள் நம்மைப் டோலீசாரிடம்தானே ஒப்புவிப்பார்கள். அவர்கள் சாட்சியில்லாமல் என்ன செய்யப் போகிறார்களென்று நினைக்க வேண்டாம். உம்மை நாங்கள் போலீஸார் வரையில் அனுப்பப் போகிறதில்லை. நாங்களே உம்முடைய உயிரை உண்டு இல்லையென்று செய்துவிடுவோம். நிஜத்தைச் சொல்லிவிடும்” என்று அதட்டிக் கூறினார்.

உடனே வக்கீல் சீனிவாச முதலியார், “ஏன் சாட்சி இல்லை! இவர் எழுதியனுப்பிய கடிதம் இருக்கிறதல்லவா! அது ஒன்றே போதுமான சாட்சியமாயிற்றே” என்றார்.

அவ்வாறு மூலைக்கொருவராய் பொன்னுரங்க முதலியாரை அதட்டவும் வையவும் பயமுறுத்தவும் தொடங்கியதை உணர்ந்த பூஞ்சோலையம்மாள் சகிக்கவொண்ணாத திகிலடைந்து நடுநடுங்கிப் போய், அவ்வளவும் ஒன்றுக்குப் பத்தாய்ப் பிற்பாடு தனக்கு வந்து விளையப் போகிறதேயென்ற கவலைகொண்டு, தான் அப்பொழுதாவது உண்மையை உள்ளபடி வெளியிட்டு விடலாம் என்று நினைத்தாள். ஆயினும் அதுவரையில் தான் பொய்யான தகவல்களைக் கூறிவிட்டு அப்பொழுது திடீரென்று மாற்றுவதற்கும் அந்த அம்மாளினது மனம் துணிவடையவில்லை. ஆதலால், அந்த அம்மாள் தான் என்ன செய்வதென்பதை நிச்சயிக்க மாட்டாமல் சோர்ந்து மயங்கிச் சுவரில் சாய்ந்தபடி நின்றாள்.

பொன்னுரங்க முதலியாரோ பைத்தியங் கொண்டவரைப் போலானார். அவர் பொறுமையோடு அதுவரையில் தம்மை அடக்கிக்கொண்டு, ஏதோ தவறு நடந்து போயிருக்கிறதென்று நினைத்து உண்மையை அறிய முயன்றார். மற்றவர் அவரிடம்