பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 241

மரியாதைக் குறைவான வார்த்தைகளை உபயோகித்ததைக் காணக் காண அவரது மனதில் ரெளத்திராகாரமான கோபம் பொங்கி யெழுந்தது. ஆனாலும், பெண் காணாமல் போயிருக்கிற சந்தர்ப் பத்தில் தாம் பதறி விகாரமாக நடந்து கொள்வது உசிதமல்ல வென்று நினைத்து மிகுந்த பாடுபட்டுத் தமது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டே அது வரையில் மொழிந்தார். கடைசியில் வக்கீல் சீனிவாச முதலியார் தாம் ஏதோ கடிதம் எழுதியதாகக் கூறியதைக் கேட்கவே, அவருக்கு மிதமிஞ்சிய கோபாவேசம் பொங்கிப் போய்விட்டது. அவர் தம்மை மறந்து உக்கிரமாகப் பேசத் தொடங்கி, “நீங்கள் எல்லோரும் கெளரவம் வாய்த்த மனிதராயிருந்து இப்படி மாடுகளாக எப்பொழுது மாறினர்கள் என்பது தெரியவில்லை. இந்தச் சங்கதியை இப்போதுதான் முதன் முதலாக நான் கேள்வியுற்று இங்கே வந்ததாக நான் சொல்லு கிறேன். அதைக் காதில் வாங்காமல் மனம் போனபடி நீங்கள் பேசுகிறீர்கள். நான் ஏதோ கடிதம் எழுதியதாக வக்கீல் முதலியார் சொல்லுகிறார். அது என்ன கடிதம் ஐயா அதை எடுத்து இத்தனை ஜனங்களுக்கு முன்னால் காட்டுங்கள். நான் இவர் களுக்கு எப்போதாவது எவ்விதமான கடிதம் எழுதி இருந்தா லாவது, அதைக் கொண்டு வந்து காட்டுங்கள். நீங்கள் எனக்கு இந்த இடத்தில் ஒவ்விதமான சிrை நடத்தி வைத்தாலும், அதற்கு நான் உடன்படுகிறேன். நான் இவர்களுக்குக் கடிதமே எழுதவில்லையென்று ருஜுவானால், பிறகு உங்களை நான் இலேசில் விடமாட்டேன். என் காலில் இருப்பதை எடுத்து, என்னை அவமரியாதையாகப் பேசின நாய்களை இவ்விடத் திலேயே அடித்தே தீருவேன்’ என்று மிகுந்த ஆவேசத்தோடு கூறினார்.

அதைக் கேட்ட சிலர் உடனே பயந்து அடங்கிப் போயினர். சிலர் முன்னிலும் அதிகரித்த கோபாவேசமும் மூர்க்கத்தனமும் அடைந்து, “அடேய்! யாரையடா செருப்பால் அடிக்கிறேன் என்கிறாய்! ஆகா அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டதா! எங்கே அடி பார்க்கலாம்” என்று மிகுந்த ஆத்திரத்தோடு கூறிப் பதறிய வண்ணம் தமது உடைகளை இறக்கிக் கட்டிக்கொண்டு அவருடன் யுத்தம் செய்ய ஆயத்தமாயினர். உடனே வக்கீல் சீனிவாச முதலியார் நிரம்பவும் ஓங்கிய குரலில் பேசத்தொடங்கி,

செ.கோ..!!!-18