பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 243

ஜாகைக்கு வரவேண்டுமென்றும் நீர் இன்று காலையில் கடிதம் எழுதி ஒர் ஆளிடம் கொடுத்தனுப்பினர். வேறு அவசர ஜோலிகள் இருந்ததைக் கருதி இந்த அம்மாள் தாமே புறப்பட்டுவர முடியவில்லை. ஆகையால் தமது மூத்த பெண்ணான கோகிலாம்பாளை உம்முடைய வீட்டுக்கு அனுப்பினார்கள். பகல் 4 மணி வரையில் பெண் திரும்பி வரவில்லை. அம்மாள் கவலை கொண்டு தாமே புறப்பட்டு உம்முடைய வீட்டுக்கு வந்தார்கள். பெண் அதற்கு முன்பே அவ்விடத்திலிருந்து புறப்பட்டு வந்துவிட்டதாக உம்முடைய சம்சாரம் சொல்லி அம்மாளை அனுப்பி வைத்தார்கள். அம்மாள் வேறு பல இடங்களில் போய்த் தேடி விட்டு, கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கே வந்து கலங்கிப் போய் நிற்கிறார்கள். இந்த விவரம் உமக்குத் தெரியாததல்ல. அப்படி இருந்தும், நான் இதை இன்னொரு தடவை சொல்லும்படிச் செய்கிறீர். நீர் இப்போது நடந்துகொள்ளும் மாதிரியைப் பார்த்தால், பெண் காணாமல் போன விஷயத்தில் உம்மேல் சம்சயம் கொள்ள இடம் கொடுக்கிறது. நீர் கடிதம் எழுதியதையும், இவர்கள் வந்து போனதையும் நீர் சாதாரணமாக ஒப்புக்கொண்டிருந்தால், பெண் ஒருவேளை வேறு எவ்விதமாகவாவது காணாமல் போயிருக்குமோவென்றும் சந்தேகிக்க இடம் உண்டாகும். இப்போது உம்முடைய நடத்தையே உம்மைக் காட்டிக் கொடுப்பதுபோல இருக்கிறது” என்றார்.

அவரது சொற்களைக் கேட்ட பொன்னுரங்க முதலியார் நிரம்பவும் பதறிப்போய், ஆகா! என்ன ஆச்சரியம்: இது பெருத்த அண்டப் புளுகாக இருக்கிறதே! நான் இவர்களுக்கு எவ்விதமான கடிதமும் என்றைக்கும் எழுதினதே கிடையாது. இவர்களிடம் அவ்வளவு தூரம் உரிமைப் பாராட்ட நான் இவர்களுக்கு அவ்வளவு நெருங்கிய பந்துவுமில்லை. இவர்களுக்கு நான் ரகஸியமாகச் சொல்லக்கூடிய முக்கிய சங்கதியும் ஒன்று மில்லை. அப்படி நான் இவர்களுக்கு ஏதாவது சங்கதி சொல்ல எண்ணியிருந்தாலும், நானோ என் சம்சாரமோ நேரில் இங்கே வந்து இவர்களிடம் தெரிவித்திருப்போமேயன்றி, தனிமை யிலிருக்கும் பெண் பிள்ளைகளான இவர்களை நான் என் வீட்டிற்கு அழைக்க ஒரு நாளும் துணிந்திருக்க மாட்டேன்.