பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 23

உடனே அதை நாம் பத்திரமாய் அதனுடைய ஜாகையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு மறுவேலை பார்ப்போம்” என்று கூறினார்.

அதைக் கேட்ட மினியன் ஆழ்ந்த கவலையும் மனக்கலக்க மும் காட்டி, “என்னமோ ஆண்டவந்தாங்க காப்பாத்தணும். நாம்ப யாருக்கும் ஒரு கெடுதலும் எண்ணலே. அந்தக் கொயந்திக்கி நல்லது செய்யவே பார்த்தோம். நம்புளுக்கு ஆண்டவன் கெடுதலு செய்யமாட்டானுங்க” என்றான்.

அவ்வாறு அவர்கள் இருவரும் சம்பாவித்துக்கொண்டே இருக்க வண்டி மயிலாப்பூரை அடைந்தது. அந்த ரஸ்தா கடற்கரை ஒரமாகவே மயிலாப்பூருக்கு அப்பாலும் செல்கிறது. ஆயினும், அந்த இடத்தில் ஊருக்குள் போவதற்கு ஒரு கிளை ரஸ்தா பிரிந்துபோகிறது. அந்த இடத்தண்டை அவர்களது வண்டி சென்ற காலத்தில், சுந்தரமூர்த்தி முதலியார் மினியனைப் பார்த்து, ‘அடே! மினியா இந்த இடத்தில்தான் நாம் என்ன செய்வது என்பது தெரியவில்லை. இந்தக் கிளை ரஸ்தாவின் வழியாக அவளுடைய வண்டி மயிலாப்பூருக்குள் போயிருக்குமோ, அல்லது, நேராகவே இந்தப் பெரிய ரஸ்தாவில் கடற்கரை ஒரமாகத் தெற்குத் திசையில் எங்கேயாவது போயிருக்குமா என்பதை நாம் எப்படி நிச்சயிக்கிறது?’ என்று குழம்பிய மனத்தோடு கூறினார்.

அதைக் கேட்ட மினியனும் மனக் குழப்பமடைந்து அவர் கூறிய சந்தேகத்தை எப்படி நிச்சயப்படுவது என்பதை அறியாமல் தத்தளிக்கலானான். அவ்வாறு அவர்கள் சென்ற கிளை ரஸ்தாவை அடைந்த காலத்தில், அவ்விடத்தில் ஒரு மனிதர் காணப் பட்டார். அவர் சுந்தரமூர்த்தி முதலியாருக்கு அறிமுகமான மனிதராயிருக்க, அதை உணர்ந்த இளைய ஜெமீந்தார் மிகுந்த மகிழ்ச்சியும் முகமலர்ச்சியும் காட்டித் தமது கைகளைத் தட்டி, “ஐயா! பொன்னுசாமி நாயக்ரே! இங்கே நீங்கள் எவ்வளவு நாழிகையாய் நிற்கிறீர்கள்?’ என்றார்.

பொன்னுசாமி நாயகர், ‘நான் இங்கெ அரை நாழிகை நேரமாய் நிற்கிறேன். நானும் இன்னொரு மனிதரும்