பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 செளந்தர கோகிலம்

நம்முடைய ராயபுரத்து முதலியார் ஐயா பேரில் அநியாயமாகச் சந்தேகப்பட்டோம். அம்மாள் இவர்களுடைய பெயரைக் குறித்து இத்தனை வேலைக்காரர்களுக்கும் முன்னால்தான் சொன்னார்கள். அம்மாள் அப்படி ஏன் சொன்னார்கள் என்பது தான் தெரியவில்லை. இருக்கட்டும். நீங்கள் எல்லோரும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள். நான் போய் அக்காளைப் பார்த்து அவள் எங்கே போயிருந்தாள் என்ற உண்மையான தகவலைத் தெரிந்து கொண்டு வருகிறேன். பண்டமோரிடம் பழியோரிடம் என்கிறபடி நாம் அக்கிரமமாக அவர் பேரிலும் குற்றம் சுமத்துவது சரியல்ல. நம்முடைய உறவினர்களெல் லோரும் தக்க பெரிய மனிதர்கள். அவர்களுடைய உறவு இன்றோடு போகிறதல்ல. ஆகையால், நாம் ஆத்திரப்படாமல் உண்மையைத் தெரிந்து கொள்வதே நல்லது. ராயபுரத்து முதலியார் ஐயா பேரில் அம்மாள் சொன்னது அநேகமாய்த் தப்பாகத்தான் இருக்குமென்று நான் எண்ணுகிறேன். கோகிலா என்ன சொல்லுகிறாளென்று கேட்டுப் பார்த்து விடுவோம்” என்று கூறிய வண்ணம், தங்கள் வேலைக்காரர்கள் எல்லோரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு வெளியில் சென்றாள். இரண்டு மூன்று பெரிய கூடங்களுக்கும் அறை களுக்கும் அப்பால் இருந்த தனியான ஒரு விடுதியில் கோகிலாம்பாள் அப்பொழுதுதான் போய் உட்கார்ந்து கொண்டாள். தன்னைத் தேடிக்கொண்டு தனது தாய் போயிருப் பதாக சுந்தரமூர்த்தி முதலியார் கூறக் கேட்டது முதல் தனது தாயைப் பற்றிய கவலையே பெரிதாக அவளது மனத்தில் பெருகி, ஒயாத வேதனையை உண்டாக்கிக் கொண்டிருந்தமை யால், அவள் பங்களாவிற்கு வந்தவுடன் தனது தாயைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளவே ஆவலுற்றாள். ஆயினும் வேலைக்காரன் செளந்தரவல்லிக்குப் பயந்து, கோகிலாம்பாளிடம் வேறு எவ்விதத் தகவலையும் தெரிவிக்காமல் யாரோ சில பெரிய மனிதர்கள் வந்திருப்பதால், தனியாகக் கொஞ்ச நேரம் மறைவாயிருக்கும்படி செளந்தரவல்லி சொல்லச் சொன்னாள் என்று மாத்திரம் தெரிவித்துவிட்டு, பந்து ஜனங்கள் முதலியோர் கூடியிருந்த இடத்தை நோக்கி ஓடிவிட்டான் ஆதலால், தனிமையில் விடப்பட்ட கோகிலாம்பாள் எந்த விவரத்தையும்