பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 செளந்தர கோகிலம்

அவளுக்கு மிகுந்த வியப்பைக் கொடுத்தது. தான் மைலாப்பூரில் இருந்தபொழுது சுந்தரமூர்த்தி முதலியார் தன் வரலாற்றை டெலிபோன் மூலமாய்ப் புஷ்பாவதிக்குத் தெரிவித்தார். ஆதலால், அதைப் புஷ்பாவதி செளந்தரவல்லிக்கும் தனது தாய்க்கும் மற்றவர்க்கும் சொல்லி இருக்க வேண்டுமென்று அவள் நினைத்திருந்தாள். தன்னைக் கண்டவுடன் செளந்தரவல்லி கேட்ட கேள்விகளிலிருந்து, புஷ்பாவதி அந்தச் செய்தியைத் தன் தங்கையிடம் வெளியிடவில்லையென்று நினைக்க இடம் கொடுத்தது. அதுவுமன்றி, நிச்சயதார்த்த தினத்திற்குமுன் தானும் கண்ணபிரானும் பூஞ்சோலையில் தனியாயிருந்த காலத்தில் செளந்தரவல்வி அங்கே வந்து நிரம்பவும் கோபமாய்ப் பேசிவிட்டு வந்ததற்குப் பிறகு அவள் கோகிலாம்பாளுடன் பேசாமல் மிகுந்த குரோதம் பாராட்டிக் கொண்டிருந்தாள். ஆதலால், அப்படி இருந்தவள் அவ்வளவு தூரம் மாறுபட்டுத் தன்னிடம் நிரம்பவும் வாஞ்சையாகவும் உருக்கமாகவும் பேசியதைக் காணக் கோகிலாம்பாளின் மனம் அத்யந்த சந்தோஷத்தினால் பொங்கிப் பரவசமடைந்தது. அவள் தன்னிடம் கொண்டிருந்த கோபமும் குரோத நினைவும் மாறிப் போய்விட்டனவென்றும், அவள் தன்னிடம் பழையபடி அந்தரங்கமான பாசமும் வாத்சல்யமும் உடையவளாய் இருக்கிறாளென்றும் கோகிலாம்பாள் நினைத்து விட்டதன்றி, அவளிடம் தான் எதைப் பற்றியும் கபடமாகப் பேசுவது ஒழுங்கல்லவென்றும் எண்ணி அவளை நோக்கி, ‘அம்மா செளந்தரா! நீ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லுகிறேன். நம்முடைய அம்மாள் பங்களாவுக்குத் திரும்பிவந்து விட்டார்களா இல்லையா என்ற விஷயத்தை மாத்திரம் நீ முதலில் தெரிவித்து விடு. அதைப் பற்றித்தான் என் மனம் நிரம்பவும் சஞ்சலமடைந்து கொண்டிருக்கிறது” என்று அன்பொழுக வினவினாள்.

உடனே செளந்தரவல்லி, ‘அம்மாள் பங்களாவுக்கு வந்து விட்டார்கள். அம்மாள் உன்னைத் தேடிக்கொண்டு பங்களாவை விட்டுப் போனார்கள் என்ற சங்கதிகூட உனக்குத் தெரிந்திருக் கிறதே! அதை உன்னிடம் யார் சொன்னார்கள்?’ என்றாள்.

கோகிலாம்பாள், ‘செளந்தரா! நீ பேசுவதைப் பார்த்தால், உனக்கு என்னைப் பற்றிய தகவல் எதுவுமே தெரியாது