பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 253

செளந்தரவல்லி : ஆம். அம்மாளும் புஷ்பாவதியை இன்னம் பார்க்கவில்லை. நீ பேசுகிற மாதிரியிலிருந்து, நீ தான் டெலிபோன் மூலமாய் புஷ்பாவதிக்கு எதோ செய்தியனுப் பியவள் என்று எண்ண வேண்டியிருக்கிறது!

கோகிலாம்பாள் : நான் அந்த அம்மாளுக்கு எந்தச் சங்கதி யையும் சொல்லவில்லை. அவர்களுடைய தமயனார்தான் டெலிபோன் மூலமாய் அவர்களுடன் பேசியது.

செளந்தரவல்லி : அவர்கள் எங்கே இருந்து பேசினார்கள்? அது உனக்கு எப்படித் தெரிந்தது?

கோகிலாம்பாள் : காலையில் அம்மாள் என்னை ஒரிடத் துக்கு அவசரமாக அனுப்பினார்களல்லவா, அந்தக் காரியத்தை முடித்துக்கொண்டு நான் மத்தியானத்துக்குமேல் மைலாப்பூருக்குப் போக நேர்ந்தது. அவ்விடத்தில் புஷ்பாவதியம்மாளின் தமயனார் என்னைக் கண்டு அவர்களுடைய பங்களாவுக்கு வரும்படி கூப்பிட்டு அழைத்துக்கொண்டு போனார்கள். இவ்வளவு நேரம் அங்கே இருந்துவிட்டு இப்போது அங்கே இருந்துதான் நேராக நான் வருகிறேன். என்னைப்பற்றி நம்முடைய அம்மாள் கவலைப்படுவார்களென்றும், நான் உடனே புறப்பட்டுப் போக வேண்டுமென்றும் நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்காமல், நான் கொஞ்ச நேரம் அங்கே இருந்துதான் வர வேண்டுமென்று நிரம்பவும் பிடிவாதம் பிடித்தார்கள். என் மனசிலும் ஒரு முக்கியமான எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஆகையால் அதைக் கருதி நான் அவர்களுடைய விருப்பத்திற்கு அனுசரணையாக நடந்து கொள்ள நேர்ந்தது. அதாவது, நீ அவர்களையே கட்டிக்கொள்ள வேண்டுமென்று ஒரே உறுதியாக இருக்கிறாயென்பது எனக்குத் தெரியும். என் சம்பந்தமாக நேர்ந்த சில சம்பவங்களைக் கண்டு அவர்கள் ஒருகால் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பார்களோ என்ற சந்தேகம் இருந்தது. அந்த விஷயத்தைப் பற்றி முடிவாகப் பேசி, அவர்கள் உன்னையே கட்டிக் கொள்வது என்ற வாக்குறுதியை நான் அவர்களிடம் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தேன். இன்னும் கொஞ்சநேரம் முன்னால் வரவேண்டுமென்று நான் பிரயத்தனப் பட்டேன். வண்டிக்காரர்கள் ஒருவர்கூட அகப்படவில்லை.