பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 செளந்தர கோகிலம்

அவர்களுள் ஒருவன் வீட்டில் குழந்தை இறந்து போய்விட்ட தாம். அதனால் ஒருவரும் இந்நேரம் வரையில் அகப்படவில்லை. இப்போதுதான் வந்தார்கள். நான் உடனே புறப்பட்டு வந்து சேர்ந்தேன். வந்த உடன் உன்னைக் கண்டு முக்கியமான இந்த சந்தோஷ சங்கதியை உனக்குச் சொல்ல வேண்டுமென்று என் மனசு துடித்துக் கொண்டிருந்தது. அதற்குத் தகுந்தபடி உன்னையே நான் முதலில் கண்டேன் - என்று அந்தரங்கமான பிரியத்தோடும் பரிவோடும் கூறினாள். -

தனது அக்காள் தன்மீது ஆழ்ந்த பிரியம் வைத்திருக்கிறாள் என்பதையாகிலும், அவளைத் தான் மற்றவருக்கு எதிரில் மான பங்கப்படுத்துவது அக்கிரமம் என்பதையாகிலும் செளந்தரவல்லி சிறிதும் உணராமல், தனது அக்காள் தன்னிடம் கபடமாகவும் தந்திரமாகவும் பேசுகிறாள் என்றும், தான் தீர்மானித்துக் கொண்டபடி அவளை எல்லோருக்கும் எதிரில் அவமானப் படுத்தியே தீரவேண்டும் என்றும் எண்ணிக் கொண்டவளாய்த் தானும் அவளிடம் கபடமாகவும் தந்திரமாகவும் நடந்து, அவளைக் கவிழ்த்துவிட நினைத்து நிரம்பவும் நயமாக மறுமொழி கூறத் தொடங்கி, “அக்கா! உன்னுடைய நல்ல மனசைப் போல வேறே யாருக்கு இருக்கப் போகிறது? ஆதியிலிருந்தே அவர்களுக்கு உன்பேரில் தான் கண். இப்போது இந்த நிச்சயதார்த்தம் இப்படி அலங்கோலமாய் முடிந்தபிறகு நீயே உன்னுடைய பழைய தீர்மானத்தை மாற்றிக்கொண்டு எனக்குப் போட்டியாக வந்து விடுவாயோ என்று நான் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன். நீ இப்போது சொன்னதிலிருந்து என் சந்தேகம் தப்பானதென்று நிச்சயமாயிற்று. இந்தச் சங்கதி இருக்கட்டும். இதைப்பற்றி நாம் தனியாகப் பேசிக் கொள்வோம். நம்முடைய அம்மாள் வெளியில் போய்விட்டு வந்தது முதல், உன்னைக் காணோமே என்ற திகிலில் பித்துக் கொண்டவர்கள் போல ஒரே கலக்க மாகவும் கவலையாகவும் அப்படியே கல்போல உட்கார்ந் திருக்கிறார்கள். நீ வந்துவிட்டதாக வேலைக்காரன் வந்து என்னிடம் சொன்னான். அதை நான் அம்மாளிடம் உடனே சொன்னால், அவர்களுக்கு அது எப்படி இருக்குமோவென்று உன்னோடு பேசி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு உன்னையும் உடனே அம்மாளிடம் அழைத்துக்கொண்டு போகலாமென்று ஒடி வந்தேன்’ என்றாள்.