பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 255

அந்த வார்த்தையைக் கேட்ட கோகிலாம்பாளுக்குத் தனது தாயைப்பற்றி மிகுந்த கவலையும் ஆவலும் பெருகிவிட்டன. அந்தக் கலவரத்தில், யாரோ சில பெரிய மனிதர்கள் உள்ளே வந்திருப்பதாக வேலைக்காரன் கூறியதைப் பற்றிய நினைவு அவளுக்கு அப்பொழுது உண்டாகவில்லை. அவள், “சரி; போவோம், சா’ என்று கூறிய வண்ணம் எழுந்தாள். அவளை அழைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கிய செளந்தரவல்லி, “இன்று காலையில் நீ திருவல்லிக்கேணிக்கு ஏதோ அவசரமான காரியமாய்ப் போனதாகக் கேள்வியுற்றவுடன் எனக்கு ஒர் எண்ணம் தான் உண்டாயிற்று. இவ்வளவு தூரம் உரிமை பாராட்டி நம்மை அழைக்கக் கூடியவர்களும், நீ தனிமையில் போய்ப் பேசக்கூடியவர்களுமான நம்முடைய நெருங்கிய பந்து திருவல்லிக்கேணியில் வக்கீல் சீனிவாச முதலியாரைத் தவிர வேறு யாருமில்லையே. நீ அநேகமாய் அங்கேதான் போயிருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நிச்சயதார்த்த சமயத்தில் போலீஸ் இன்ஸ்பெண்டர் வந்து மாப்பிள்ளையைக் கைதுசெய்த விஷயமாய் வக்கீல் ஐயா ஏதாவது யோசனை சொல்லுவதற்காக அம்மாளைக் கூப்பிட்டிருப்பார்களோ வென்றும் நினைத்தேன். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் உன்னிடம் கேட்டால், என்னை மதித்து நீ உள்ள சங்கதியைச் சொல்லவே மாட்டாயென்றும் நினைத்துக் கொண்டேன். இப்போதும் அதைப்பற்றி நான் உன்னிடம் கேட்க வேண்டு மென்ற ஆசையும் துாண்டியது. கேட்கக் கூடாது என்ற எண்ணமும் அதைத் தடுத்தது. நீ இப்போது என்னிடத்தில் நிரம்பவும் பிரியமாகப் பேசுவதைக் கண்டவுடன், நீ என்னை மதித்து உண்மையைச் சொல்வாயென்ற எண்ணம் எழுந்து தூண்டியது. ஆகையால், நான் என் மனசில் இருந்ததை அப்படியே சொல்லி விட்டேன்’ என்றாள்.

அதைக்கேட்ட கோகிலாம்பாள் இரண்டொரு நிமிஷநேரம் ஆழ்ந்து சிந்தனை செய்து பார்த்தாள். தனது தாய் அன்று காலையில்தான் திருவல்லிக்கேணிக்குப் போனதாகச் சொல்லி இருக்கிறாளென்பதால், அந்தப் பேட்டையில் தங்களுக்கு நெருங்கிய பந்து வக்கீல் சீனிவாச முதலியாரைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆதலால், அவரது வீட்டுக்கே தான் போனதாகச்

&