பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 செளந்தர கோகிலம்

சொல்ல வேண்டுமென்று தனது தாய் தனக்குள் எண்ணிக் கொண்டிருக்க வேண்டுமென்பது கோகிலாம்பாளுக்கும் நிச்சய மாகப்பட்டது. அத்தனை வேலைக்காரர்களுக்கும் முன்னிலையில் செளந்தரவல்லி தன்மீது குறை கூறியதுபோலப் பேசியதைக் கேட்டு, அக்காளுக்கும் தங்கைக்கும் உள்ளுக்குள் ஒருவித மனஸ் தாபம் ஏதோ இருப்பதாய் வேலைக்காரர் எண்ணிக் கொள்ளும் படி தான் இடங்கொடுக்கக் கூடாதென்று நினைத்த கோகிலாம் பாள் நிரம்பவும் பட்சமாக அவளிடம் பேசத்தொடங்கி, “என்ன செளந்தரா என்னிடம் நீ இப்படி வித்தியாசம் பாராட்டிப் பேசுகிறாய்! உனக்குத் தெரியாத ரகஸியம் உண்டா? அப்படியும் இதில் ரகஸியம் என்ன இருக்கிறது? அம்மாள்தான் என்னைத் திருவல்லிக்கேணிக்கு அனுப்பியதாகச் சொன்னார்கள் என்கிறாயே! அந்த ஊரில் நம்முடைய நெருங்கிய பந்து வேறே யார் இருக்கிறார்கள். வக்கீல் ஐயாவின் வீட்டுக்குத்தான் நான் போயிருக்க வேண்டுமென்று நீயேதான் சொல்லிவிட்டாயே. இதைப்பற்றி மறுபடியும் ஏன் சந்தேகமாய்க் கேட்கிறாய்?” என்றாள். .

அதைக் கேட்ட செளந்தரவல்லி, நீ திருவல்லிக்கேணிக்குப் போனதாக யாரோ வேலைக்காரர்தான் என்னிடம் நேரில் சொன்னார்கள். அம்மாள் என்னிடம் அந்த மாதிரி சொல்ல வில்லை. சரி, அது எப்படியோ, நீ கேrமமாய்த் திரும்பி வந்து சேர்ந்தாயே. அதுதான் முக்கியமான சங்கதி. வா. நாம் போகலாம்” என்று கூறியபடி கோகிலாம்பாளை அழைத்துக் கொண்டு தனது தாயும் மற்ற உறவினரும் இருந்த கூடத்திற்கருகில் போய்ச் சேர்ந்தாள். அவர்களுடன் மற்ற வேலைக்காரர்களும் தொடர்ந்து சென்றனர். அந்தக் கூடத்திற்குள் நுழைவதற்கு முன் செளந்தர வல்லி கோகிலாம்பாளை நோக்கி, நீயும் அம்மாளும் காணாமல் போகவே, எனக்குத் திகில் அதிகமாய் விட்டது. புஷ்பாவதி யம்மாளுடைய நிலைமையும் அப்படியாகி விட்டது. ஆகையால் நான் வேலைக்காரர்களை கூப்பிட்டு என் திகிலை வெளி யிட்டேன். அவர்கள் ஒடி நம்முடைய மனிதரில் சிலரை அழைத்துக்கொண்டு வந்தார்கள். அவர்களும் அம்மாளண்டை இருக்கிறார்கள்” என்று கூறிய வண்ணம் கூடத்திற்குள் நுழைந்து விட்டாள். -