பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 257

அதைக்கேட்ட கோகிலாம்பாள் ஒருவாறு திடுக்கிட்டுப் போனாள். ஆனாலும் வக்கீல் சீனிவாச முதலியாரும் அங்கே வந்திருப்பார் என்ற எண்ணம் அவளது மனத்தில் உடனே உண்டாகவில்லை. செளந்தரவல்லி கூடத்திற்குள் போய்விட்டா ளாதலால், தான் பின் தங்குவது சரியல்லவென்று நினைத்து கோகிலாம்பாளும் கூடத்திற்குள் சென்றாள். அவளைத் தொடர்ந்து வேலைக்காரர்களும் அங்கே வந்து சேர்ந்தன்ர். உடனே செளந்தரவல்லி எல்லோரையும் பார்த்து உரத்த குரலில் பேசத் தொடங்கி, “இதோ நம்முடைய கோகிலா வந்துவிட்டாள்; அவள் வேறே எங்கேயும் போகவில்லை. திருவல்லிக்கேணியில் நம்முடைய பந்துவான வக்கீல் ஐயா ஒருவர் இருக்கிறார்களாமே. அவர்களிடத்திலிருந்துதான் கடிதம் வந்ததாம். அவர்களுடைய வீட்டுக்குத்தான் அவளை அம்மாள் அனுப்பினார்களாம். அங்கே போய்க் காரியத்தைப் பார்த்துக் கொண்டு, மைலாப்பூருக்கு வேறொருவர் வீட்டுக்குப் போய்விட்டு அங்கிருந்து நேராக வருகிறாளாம். போன இடத்தில் தனக்கு எவ்வித அபாயமும் நேரவில்லையென்று அக்காள் சொல்லுகிறாள். அதுதான் முக்கிய மான சந்தோஷ சங்கதி. வீட்டிலிருந்த உங்கள் எல்லோரையும் எங்கள் வேலைக்காரர்கள் அழைத்துவந்து அந்த இரவு காலத்தில் வீண் பிரயாசைக்கும் மனவேதனைக்கும் ஆளாக்கிவிட்டார்கள். அதுதான் எங்கள் மனசுக்கு வருத்தமாக இருக்கிறது. உபயோக மற்ற விஷயம் பிரமாதமாக வளர்ந்து விட்டது. திருவல்லிக்கேணி யிலிருந்து அந்த வக்கீல் ஐயா வரவில்லை போலிருக்கிறது. அவர்கள் வந்திருந்தால், நம்முடைய கவலையெல்லாம் இப்போதே தீர்ந்து போயிருக்கும். நான் அந்த ஐயாவை அவ்வளவாகப் பார்த்ததில்லை. அவர்கள் இப்போது இங்கே இருக்கிறார்களே இல்லையோவென்பது தெரியவில்லை” என்று தந்திரமாகவும் நயமாகவும் கூறியபடி ஒரு பக்கமாகப் போய் நின்றாள்.

அவள் கூறிய வார்த்தையைக் கேட்டு, அங்கிருந்த பெருத்த ஜனக்கும்பலைக் கண்ட கோகிலாம்பாள் திடுக்கிட்டு முற்றிலும் பிரமித்து நடுநடுங்கி ஸ்தம்பித்து அப்படியே நின்றுவிட்டாள்.

செளந்தரவல்லி கூறிய சொற்களைக் கேட்கவே, அந்தக் கும்பலில் இருந்த பலர் ஒரே காலத்தில் பேசத்தொடங்கி பல

செ.கோ..!!!-17