பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 செளந்தர கோகிலம்

செம்படவர் குப்பத்துக்குப்போய் மீனுக்காக அச்சாரப் பணம் கொடுக்கவேண்டுமென்று இவ்வளவு தூரம் வந்தோம். அவர் பணம் எடுத்துக் கொண்டுவர மறந்துபோய் விட்டார். இங்கே வந்தபொழுதுதான் அவருக்கு அந்த நினைவு உண்டாயிற்று, என்னை இங்கே நிறுத்திவிட்டு அவர் பணம் எடுத்துக்கொண்டு வருவதற்காக ஒடி இருக்கிறார். அதனால் தான் நான் இங்கே நின்றுகொண்டிருக்கிறேன்” என்றார்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார், “ஒகோ! அப்படியா சங்கதி: சரி, அதிருக்கட்டும். இந்த வழியாகக் கொஞ்ச நேரத்துக்குமுன் ஒரு பெட்டி வண்டி வந்ததா? வெள்ளைக் குதிரை பூட்டப்பட்டு இருக்கும். இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள் மூடப்பட்டு இருக்கும். உள்ளே ஒரே ஒர் அம்மாள் இருந்தார்கள். அந்த வண்டியை யாராவது ஒட்டிக்கொண்டு இந்தப் பக்கம் வந்ததை நீங்கள் பார்த்தீர்களா?” என்றார்.

அதைக் கேட்டவுடனே பொன்னுசாமி நாயகர் மிகுந்த ஊக்கமும் மகிழ்ச்சியும் தோற்றுவித்து, “ஆம்! ஆம்! பார்த்தேன். அது வெள்ளைக்குதிரை பூட்டப்பட்ட ஒரு பெட்டி வண்டிதான். யாரோ ஒரு காசாரி தனியாக இருந்து அதை வேகமாய் ஒட்டிக் கொண்டு கால்நாழிகை நேரத்திற்கு முன் வடக்கே இருந்து வந்தான். ஆனால், அந்த வண்டிக்குப் பின்னால் இன்னொரு பீட்டன் வண்டியும் வந்தது. அதில் யாரோ நாலைந்து மனிதர்கள் இருந்தார்கள்’ என்றார்.

அதைக் கேட்ட இளைய ஜெமீந்தார் கட்டிலடங்கா மகிழ்ச்சியும் ஆவேசமும் பதைபதைப்பும் அடைந்து, “வெள்ளைக் குதிரை பூட்டப் பட்ட வண்டியை அதன் காசாரி எந்தப் பக்கமாய் ஒட்டிக் கொண்டு போனான்?” என்றார்.

உடனே பொன்னுசாமி நாயகர், ‘அவன் வண்டியை நேராகத் தெற்குத் திக்கில் விட்டுக்கொண்டுபோன மாதிரியாக இருக்கிறது. ஏன் என்ன விசேஷம்? அவன் யாரை அழைத்துக் கொண்டு போகிறான்? என்றார்.

சுந்தரமூர்த்தி முதலியார், “ஆகா! அப்படியா தெற்குத் திக்கிலா போனான். சரி; நாயகர் ஐயா! நான் இப்போது