பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 செளந்தர கோகிலம்

மாதிரியான கேள்விகள் கேட்டு உரத்த சப்தம் செய்யத் தொடங்கினர். இராயபுரம் பொன்னுரங்க முதலியார் மற்ற வர்கள் எல்லோரையும்விட அதிக பலமாகக் கூச்சலிட்டுத்துள்ளிக் குதித்து, “ஆகா! என்னுடைய யோக்கியதையென்ன கண்ணியம் என்ன! எல்லோரும் சேர்ந்து என்மேல் அபாண்டப் பழி சுமத்த ஆரம்பித்து விட்டீர்களே! தானே திருட்டுத் தனமெல்லாம் பண்ணிவிட்டு வக்கீல் முதலியார் என்னையல்லவா போலீஸ்கார ரிடம் ஒப்பித்து விடுவதாகப் பயமுறுத்துகிறார் தாம் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு என்னைத் தண்டிக்கிறவரல்லவா இவர் ஆகா வக்கீல் இருந்தாலும் இப்படியல்லவா இருக்க வேண்டும்! அடடா, என்ன மேதாவி ஐயா இவர்!’ என்று அடுக்கடுக்கான வசை மொழிகளால் வக்கீல் சீனிவாச முதலியாரைத் தாறுமாறாக இகழ்ந்து கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு பிரமாதமாக நர்த்தனம் செய்கிறார். சீனிவாச முதலியாருக்குப் பரிந்து பேசிய மூர்த்தி முதலியார், ‘போதுமையா! அடக்குமையா சீனிவாச முதலியார் கடிதம் எழுதியதாகப் பெண் சொல்லுகிறது; ராயபுரம் பொன்னுரங்க முதலியார் கடிதம் எழுதியதாகவும், அவருடைய வீட்டுக்கே தாங்கள் போனதாகவும் அம்மாள் சொல்லுகிறார்கள். எதையா நிஜம்? இவர்களுக் குள்ளேயே பித்தலாட்டமாக இருக்கிறதே ஐயா! இதில் யார் சொல்வது புரட்டு, யார் சொல்வது மெய்யென்பது தெரிந்த பிறகல்லவா, நீங்கள் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ள வேண்டும். அதையும் விசாரித்துப் பார்த்து விடுவோம்” என்றார். மூர்த்தி முதலியார், ‘அம்மாளுக்குத்தான் புத்தி ஸ்வாதீன மில்லாமல் இருக்கிறதே. ஏதோ புத்திக் குழப்பத்தில் அவர்கள் தான் தப்பாக உளறி இருக்கவேண்டும். கோகிலா நல்ல அறிவோடி ருப்பதால், அது சொல்வதுதான் நிஜமாயிருக்க வேண்டும்” என்றார்.

சதாசிவ முதலியார், “அடே போய்யா அது மாத்திரம் எப்படி நிஜமாயிருக்கும்? பெண்ணுக்குத்தான் எவராலும் யாதொரு அபாயமும் நேரவில்லையே. அப்படியிருக்க, சீனிவாச முதலியார் இதை ஒப்புக் கொள்ளாமல் ஏனையா மறுக்க வேண்டும்? பெண்ணைக் காணாமையால், தாயார் பைத்தியங்