பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 செளந்தர கோகிலம்

ஒரு குடும்பமென்றால், வேலைக்காரர்களுக்குச் சொல்லக்கூடிய சங்கதிகளும் இருக்கும், சொல்லத்தகாத சங்கதிகளும் இருக்கும். யுக்தா யுக்தம் பார்த்து நடந்து கொள்ள வேண்டுமல்லவா. அதைக் கருதி நான், நீ கேட்டதற்குச் சுலபமாக, “ஆம்” என்று சொல்லி வைத்தேன். பிறகு தனிமையில் உன்னிடம் உண்மையைச் சொல்லாமென்பது என்னுடைய எண்ணம்’ என்று முற்றிலும் சிநேக பாவமாகவே கூறினாள்.

கேட்டவள் போல

அவ்வாறு கோகிலாம்பாள் கூறியதைக் செளந்தரவல்லி தனக்கருகில் நின்ற ஒரு வேலைக்காரியைப் பார்த்து ஒருவித சைகை காட்டினாள். அவள் வெளியில் சென்றாள். உடனே செளந்தரவல்லி தனது அக்காளை நோக்கி, “ஆம் அக்கா! நீ சொல்வதுபோல மனிதர் பட்டுப் பட்டுத்தான் தேர்ச்சியடைய வேண்டும். ஆனால் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகத் தேர்ச்சி யடைகிறார்கள். அகப்பட்டுக் கொள்ளாமல், தந்திரமாகப் பொய் சொல்வதிலும், புரட்டுகள் செய்வதிலும் சிலர் தேர்ச்சி யடைகிறார்கள். சிலர் நாணயத்திலும் நல்ல நடத்தை யிலும் தேர்ச்சியடைகிறார்கள். ஒரே அநுபவம் அவரவருடைய மனப்போக்கின்படி வெவ்வேறு விதமான பலனைத் தருகிறது. ஆனால் நீ இந்தச் சம்பவங்களிலிருந்து நல்ல நடத்தையில்தான் தேறியிருப்பாயென்பது நிச்சயம். அது எப்படியாவது இருக்கட்டும். உனக்கு ராயபுரத்து முதலியார் ஐயாவும் எவ்விதக் கெடுதலும் செய்யவில்லை. வக்கீல் ஐயாவும் எவ்விதக் கெடுதலும் செய்ய வில்லை. நீ எங்கேயோ ஒரு காரியமாகப் போய்விட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்துவிட்டாய். அதுவே பெருத்த சந்தோஷமாயிற்று. வெளியில் போன உனக்கு என்ன விதமான அபாயம் நேர்ந்ததோ என்று நம்முடைய அம்மாள் எண்ணிப் பைத்தியம் பிடித்தவர்கள் போல் மாறி அப்படியே உட்கார்ந்து போய்விட்டார்கள். நீ போன காரியத்தைப் பார்த்துக் கொண்டு எவ்வித அபாயமும் இல்லாமல் சாதாரணமாக வந்துவிட்டாயென்ற சங்கதியை நான் போய் அம்மாளிடம் சொல்லி அவர்களைத் தேற்றலாமல்லவா?’ என்று நயமாகவும் வேடிக்கை போலவும் மொழிந்தாள். அவளது சொற்களைக் கேட்ட கோகிலாம்பாளுக்குத் தனது தாயை எப்படி யாவது தான் தேற்ற வேண்டுமென்ற நினைப்பே முக்கியமாகத் தோன்றியது. அவள் உடனே செளந்தரவல்லியை நோக்கி,